Advertisment

தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா வீட்டுப் பணிப்பெண் தற்கொலை முயற்சி!

Producer Gnanavel Raja Housemaid incident

ஸ்டூடியோ கிரீன் என்ற பேனரில் திரைப் படங்களைத்தயாரித்து வரும் ஞானவேல் ராஜா, தற்போது சூர்யாவின் கங்குவா, விக்ரமின் தங்கலான், கார்த்தியின் வா வாத்தியாரே உள்ளிட்ட படங்களைத்தயாரித்து வருகிறார்.

Advertisment

இதனிடையே கடந்த மாதம் தனது வீட்டில் தங்கப் பரிசுப் பொருட்கள் திருடப்பட்டுள்ளதாக ஞானவேல் தரப்பில் காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டது. அந்தப் புகாரில்வீட்டுப் பணிப்பெண்லட்சுமி மீது சந்தேகம் இருப்பதாக குறிப்பிடப்பட்டிருந்தது. இது தொடர்பாக ஞானவேல் ராஜா வீட்டுப் பணிப்பெண் லட்சுமியிடம் காவல் அதிகாரிகள் விசாரணை நடத்தினார்கள். அப்போது, நகைகளைத்திருடவில்லை எனப் பணிப்பெண் சொன்னதாகவும், விசாரணைக்கு இன்று வருமாறு போலீசார் எழுதி வாங்கிக் கொண்டு அனுப்பியதாகவும் கூறப்படுகிறது.

Advertisment

இந்த நிலையில் காவல்துறையின் அடுத்தடுத்த விசாரணை காரணமாக லட்சுமி மன உளைச்சலில் இருந்ததாகவும் அதனால் அரளி விதையை அரைத்துக் குடித்து தற்கொலைக்கு முயன்றதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இதையடுத்து லட்சுமியின் குடும்பத்தினர், அவரை உடனடியாக மீட்டு ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளதாக சொல்லப்படுகிறது. அங்கு லட்சுமி சிகிச்சை பெற்று வரும் நிலையில், போலீஸார் இந்தச் சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

gnanavelraja
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe