The producer family opposing Sivakarthikeyan in a movie called Parashakti?

பராசக்தி திரைப்படம் 1952 ஆம் ஆண்டு செப்டம்பர் வெளியானது. தமிழ்நாட்டின் ஒரு பெரும் சமூகப் புரட்சியை ஏற்படுத்திய படம் என்றால் மிகை இல்லை.பராசக்தி என்கிற இந்தப்படத்தின் கதை பாவலர் பாலசுந்தரம் எழுதியது. இது நாடக மேடையில் பலமுறை நடிக்கப்பட்ட கதை. இந்த கதைக்கு திரைக்கதை,வசனத்தை கலைஞர் எழுதி இருந்தார்.இந்தப் படத்தை இயக்கியவர்கள் கிருஷ்ணன் பஞ்சு.இது ஒரு பெரும் சமூகப் பிரச்சினையும் அந்த காலத்தில் நிலவிய மூடநம்பிக்கைகளையும் ஆன்மீகத்தின் பெயரிலும் மக்களை அடிமைப்படுத்தி வைத்திருந்ததை சாடிய ஒரு திரைப்படம்.‘ஓடினாள் ஓடினாள் வாழ்க்கையின் இறுதிக்கே ஓடினாள்’ என்கிற சிவாஜி பேசுகிற அந்த வசனம் மற்றும் படத்தின் ஒவ்வொரு வசனமும் திரையில் நடிக்க வரும் ஒவ்வொருவரின் நடிப்பு பயிற்சிக்கான வசனமாகவே இன்றளவும் இருந்து வருகிறது.

Advertisment

இந்த திரைப்படத்தை வேலூரைச் சேர்ந்த நேஷனல் தியேட்டர் நடத்திய பெருமாள் என்பவர் நேஷ்னல் பிக்சர்ஸ் என்கிற பெயரில் பட நிறுவனத்தை தொடங்கி தயாரித்திருந்தார். இந்த படத்தில் சிவாஜி கணேசனை நாயகனாக்க வேண்டும் என சிபாரிசு செய்தார்கலைஞர். அதன் அடிப்படையில் இந்த திரைப்படத்தின் சிவாஜி கணேசன் நாயகனாக ஒப்பந்தம் செய்யப்பட்டுசிறப்பாக நடித்தார். இந்தப் படத்தில் பண்டரிபாய் நாயகியாகவும், நடிகர் எஸ்.எஸ் ராஜேந்திரன், ராமசாமி போன்றவர்கள் நடித்திருந்தனர். திரைக்கதை, வசனத்துக்காகவே அந்தப்படம் பெரும் வெற்றி பெற்றது. அதுவரை திரைப்படங்களில் தொடாத ஆன்மீகத்தையும், குறிப்பிட்ட சமுதாயத்தினர் ஆதிக்கத்தையும் எதிர்த்து திரைப்படத்தின்வசனங்கள் அனல் தெறித்தது. இதனால் அப்போதைய ஆட்சியாளர்கள் இந்த திரைப்படம் வெளிய வராமல் இருப்பதற்காக பல நெருக்கடிகளை தந்தனர். அதனை மீறி தான் 1952 செப்டம்பர் மாதம் இந்த படம் திரைக்கு வந்து வணிக ரீதியாகவே படம் பெரும் வெற்றி பெற்றது. இப்படம் 175 நாட்களைக் கடந்து இந்த திரைப்படம்ஓடி பெருவெற்றி பெற்றது.

Advertisment

தன்னை நாயகனாக அறிமுகம் செய்த தயாரிப்பாளருக்கு நன்றி செலுத்தும் விதமாக ஒவ்வொரு ஆண்டும் சிவாஜி கணேசன் உயிரோடு இருந்தவரை தன் மனைவி மற்றும் குடும்பத்தினருடன் வேலூருக்கு வருகை தந்து நேஷனல் தியேட்டர் பெருமாளுக்கு சிறப்பு மரியாதை செய்து ஆசி பெற்று செல்வார். நடிகர் திலகம் சிவாஜி கணேசன் மறைந்த பின் அவரது வாரிசுகளான ராம்குமார் மற்றும் நடிகர் பிரபு குடும்பத்துடன் வந்து ஒவ்வொரு ஆண்டும் சீர்வரிசை செய்து அவர்களிடம் ஆசி பெற்று செல்வார்கள். நேஷனல் பிக்சர்ஸ் பெருமாள் இறந்த பின்பும்இது ஒவ்வொரு ஆண்டும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் பராசக்தி என்கிற பெயரில் நடிகர் சிவகார்த்திகேயன் ஒரு திரைப்படத்தில் நடிக்கப் போவதாக செய்திகள் வெளியாகி உள்ளது. இதற்கு வேலூர் நேஷனல் தியேட்டர் குடும்பத்தினர் அதிருப்தி அடைந்துள்ளனர். இதுகுறித்து அவர்கள் வெளியிட்டுள்ள ஒரு செய்தி குறிப்பில், ‘கலைஞர், நடிகர் திலகம் சிவாஜி கணேசன் என்கிற இரண்டு பேரும் கலைஞர்களை தமிழ்நாட்டுக்கு அடையாளப்படுத்தி காட்டியது பராசக்தி திரைப்படம். வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இந்த திரைப்படத்தின் பெயரில் நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பது என்பது ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அந்த வரலாற்றின் பெயர், தமிழ் திரையுலகிலும் தமிழ் சினிமா இளம் தமிழ்நாட்டிலும் முக்கியமானது என்பதால் அந்தப் பெயரிலான திரைப்படத்தில் நடிப்பதை சிவகார்த்திகேயன் மறுபரிசீலனை செய்ய வேண்டும்’ என வலியுறுத்தி கேட்டுள்ளனர்.

Advertisment