Advertisment

திருட்டுத்தனமாக படம் பிடித்த தியேட்டர்களுக்கு படம் வெளியிட தடை - பட்டியலை வெளியிட்ட தயாரிப்பாளர் சங்கம் !

theater

Advertisment

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்திலிருந்து நிர்வாகிகள் திரையரங்குகளில் திருட்டுத்தனமாக படம் பிடித்த திரையரங்குகளுக்கு தடை விதித்தது குறித்து அறிக்கை வெளியிட்டுள்ளார்கள். அதில்... "ஒரு திரைப்படத்தினை மிகுந்த பொருட்செலவில் தயாரிக்க தயாரிப்பாளர் பல கஷ்டங்களை கடந்து தாயரிக்கிறார். அவ்வாறு தயாரித்த அந்த திரைப்படத்தினை கடும் சிரமங்களுக்கிடையே வெளியிடுகிறார். ஆனால் அந்த திரைப்படம் வெளியிட்ட அன்றைய தினமே பைரசி மூலம் இணையதளங்களில் வந்து விடுகிறது. இது திரையரங்குகள் மூலம் திருட்டுத்தனமாக படம் பிடிக்கப்பட்டு தான் வெளியாகிறது என்று ஆதாரபூர்வமாக உறுதி செய்யப்பட்டுள்ளது. அந்த வகையில் கீழ்காணும் 10 திரையரங்குகள் மூலம் திருட்டுத்தனமாக படம் பிடித்தது கண்டுபிடிக்கப்பட்டு அந்த திரையரங்குகளின் மீது சட்ட ரீதியாக வழக்கும் தொடரப்பட்டுள்ளது. திருட்டுத்தனமாக பைரஸி எடுக்கப்பட்டு ஆதாரத்துடன் உறுதி செய்யபட்ட தியேட்டர்கள்:

1. கிருஷ்ணகிரி முருகன் .. மனுசனா நீ

2. கிருஷ்ணகிரி நயன்தாரா .. கோலிசோடா டூ

3. மயிலாடுதுறை கோமதி .. ஒரு குப்பைக் கதை

4. கரூர் எல்லோரா .. ஒரு குப்பைக் கதை

5. ஆரணி சேத்பட் பத்மாவதி .. மிஸ்டர் சந்திரமௌலி

6. கரூர் கவிதாலயா .. தொட்ரா

7. கரூர் கவிதாலயா .. ராஜா ரங்குஸ்கி

8. பெங்களூரு சத்யம் .. இமைக்கா நொடிகள்

9. விருத்தாசலம் ஜெய் சாய் கிருஷ்ணா தியேட்டர் .. சீமராஜா

10. மங்களூர் சினிபொலிஸ் .. சீமராஜா.

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="9350773771"

data-ad-format="auto"

data-full-width-responsive="true">

மேற்கண்ட திரையரங்குகளுக்கு இனி எந்த விதமான ஒத்துழைப்பும் வழங்குவதில்லை என்று தயாரிப்பாளர்கள் சங்கம் முடிவெடுத்து அதனை கியூப் நிறுவனத்திற்கும் தெரிவித்துள்ளது. அதுமட்டுமின்றி வருகிற அக்டோபர்- 17, 18ம் தேதிகளில் வெளியாகும் புதிய திரைப்படங்களின் தயாரிப்பாளர்களும் கியூப் நிறுவனத்திற்கு கடிதம் மூலமும், மின்னஞ்சல் மூலமாகவும் தங்களது திரைப்படங்களை மேற்படி திரையரங்குகளில் திரையிட வேண்டாம் என்று தெரிவித்துள்ளார்கள். எனவே நமது சங்க உறுப்பினர்கள் அனைவரும் மேற்கண்ட முடிவிற்கு ஆதரவு தரும் வகையில் இனி ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் வெளியாகும் எந்த ஒரு திரைப்படங்களையும் மேற்கண்ட திரையரங்குகளில் திரையிட வேண்டாம் என்று கியூப் நிறுவனத்திற்கு மின்னஞ்சல் அனுப்ப வேண்டுமாறு அன்புடன் கேட்டு கொள்ளப்படுகிறார்கள்" எனஅறிக்கையில் தெரிவிக்கபட்டுள்ளது.

tamilcinemaupdate theaterstrike FEFSI vishal
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe