Advertisment

க்யூபிற்கு எதிராக தொடர் நடவடிக்கைகள்... தயாரிப்பாளர் சங்கத்தின் அடுத்த மூவ்! 

vishal

திரையரங்குகளில் டிஜிட்டல் முறையில் படங்களை திரையிடுவதற்கான சேவை கட்டணத்தை குறைக்க வேண்டும் என்று வலியுறுத்தி கடந்த மார்ச் 1ஆம் தேதி முதல் பட அதிபர்கள் சங்கம் இதனுடன் மேலும் பல விதமான கோரிக்கைகளை முன் வைத்து சினிமா படப்பிடிப்புகள் மற்றும் சினிமா தொடர்பான அனைத்து நிகழ்ச்சிகளும் ரத்து செய்யப்பட்டு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மேலும் தமிழகம் மற்றும் புதுவையில் புது பட வெளியீட்டை நிறுத்தி வைத்து தியேட்டர் உரிமையாளர்களும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த முழு வேலைநிறுத்தம் காரணமாக சினிமா துறையே முடங்கியுள்ளது. இதையடுத்து நீண்ட நாட்கள் கழித்து டிஜிட்டல் பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக நேற்று தயாரிப்பாளர் சங்கத்தின் சொந்த மாஸ்டரிங் வசதியுடன் கூடிய dci 2k , 4 k ப்ரஜெக்டர்கள் மற்றும் சர்வர்கள் வழங்கும் ​​டிஜிட்டல் சர்வீஸ் ப்ரவைடரான மைக்ரோப்ளக்ஸ் நிறுவனத்துடன் தயாரிப்பாளர் சங்கம் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது. இது திரைத்துறையில் மாபெரும் மைல்கல்லாக கருதப்பட்ட நிலையில் தற்போது மீண்டும் தயாரிப்பாளர் சங்கம் மற்றோரு டிஜிட்டல் சர்வீஸ் ப்ரவைடரான கே செரா செரா வுடன் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது. வடஇந்தியா முழுவதும் 1050 திரையரங்குகளில் டிஜிட்டல் சர்வீஸ் ப்ரவைடராக இருக்கும் மிகப்பெரிய நிறுவனமான கே செரா செரா (K Sera Sera) நிறுவனம் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் நிர்ணயம் செய்த கட்டணத்தில் தமிழ் படங்களுக்கு தியேட்டர்களில் இ-சினிமா (E cinema) டிஜிட்டல் சர்வீஸ் தருவதற்கும் மற்றும் தயாரிப்பாளர் சங்கத்தின் இரண்டாவது மாஸ்டரிங் யூனிட்டாக செயல்படுவதற்கும் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்துடன் ஒப்பந்தம் செய்துகொண்டது. இதன்மூலம் இ-சினிமாவுக்கும், இனி தயாரிப்பாளர் சங்கத்திலிருந்து மட்டுமே திரையரங்கங்களுக்கு நேரடியாக படம் கொடுக்கப்படும். இந்த இரண்டு புதிய ஒப்பந்தங்களால் தற்போது நடந்து கொண்டிருக்கும் ஸ்ட்ரைக் சீக்கிரம் முடிவுக்கு வரும் என்று பரவலாக எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisment
FEFSI tamilcinemaupdate theaterstrike vishal
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe