Advertisment

மீண்டும் சிக்கலில் சிக்கிய சிம்பு!

bgrshs

சிலம்பரசன் - சுசீந்திரன் கூட்டணியில் பாரதிராஜா, நிதி அகர்வால், பாலசரவணன் உள்ளிட்ட பலர் நடிப்பில் பொங்கலன்று வெளியாகியுள்ள படம் 'ஈஸ்வரன்'. முன்னதாக இப்பட ரிலீஸுக்கு ஏகப்பட்ட சிக்கல் ஏற்பட்டது. 'அன்பானவன் அசராதவன் அடங்காதவன்' படத்தின் பிரச்சினையை முன்வைத்து, இந்தப் படத்தின் வெளியீட்டுக்கு பல்வேறு சிக்கல் ஏற்பட்டது. இறுதியில் தயாரிப்பாளர் பாலாஜி கப்பா தலையீட்டிற்கு பிறகு படம் ஒரு வழியாக சொன்ன தேதியில் வெளியானது. இந்நிலையில் திடீரென்று தயாரிப்பாளர்கள் சங்கம் சிம்பு படங்களுக்கு இனி ஒத்துழைப்பு இல்லை என்று அதிரடியாக தீர்மானம் நிறைவேற்றியுள்ளது. இதுகுறித்து இப்பட தயாரிப்பாளர் பாலாஜி கப்பா வெளியிட்டுள்ள அறிக்கையில்...

Advertisment

"‘ஈஸ்வரன்’ படம் சம்பந்தமாக எங்கள் தரப்பில் அளித்த கோரிக்கையைத் தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் ஏற்றுப் படத்தை வெளியிட ஒப்புதல் அளித்தது. மேற்கண்ட படத்தினை வெளியிடுவதற்கு உறுதுணையாக இருந்த சங்க நிர்வாகிகள் அனைவருக்கும் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். மேலும், ஒத்துழைப்பு தராத சிம்பு மீது நீங்கள் எடுக்கும் அனைத்து நடவடிக்கைக்கும் உறுதுணையாக இருப்போம்" என்று தெரிவித்துள்ளார்.

Advertisment

easwaran Simbu
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe