/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/dhanush-ram.jpg)
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்தனுஷ்,வட சென்னை,அசுரன் எனதொடர்ந்து வெற்றிப்படங்களை தந்து வருகிறார். இவர் நடிப்பில்உருவானஜகமேதந்திரம் படம் வெளியீட்டுக்கு தயாராக உள்ளது. தற்போது மாரி செல்வராஜ் இயக்கத்தில் கர்ணன்படத்திலும், அத்ராங்கி ரேஎன்ற இந்தி படத்திலும்நடித்து வருகிறார்.
தனுஷ்,அடுத்ததாக சத்யஜோதி பிலிம்ஸ்தயாரிக்கும்படத்தில்நடிக்கவுள்ளார். இப்படத்தை கார்த்திக்நரேன்இயக்க, ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைக்கவுள்ளார்.இதைதொடர்ந்து தனுஷ், ராட்சசன் பட இயக்குனர் ராம்குமார் இயக்கும்படத்தில்நடிப்பதாகவும், அப்படத்தையும் சத்யஜோதி பிலிம்ஸ்நிறுவனமேதயாரிக்கும்எனவும்தகவல் வெளியானது.
இந்தநிலையில் இத்தகவலை,சத்யஜோதிபிலிம்ஸ்உறுதி செய்துள்ளது. இயக்குனர் ராம்குமார் பிறந்தநாளைமுன்னிட்டு,அந்நிறுவனம் வெளியிட்டவாழ்த்து செய்தியில் தனுஷின்அடுத்த படத்தில்உங்களோடுஇணைவது மகிழ்ச்சியாக உள்ளது எனதெரிவித்துள்ளது. இப்படம்விண்வெளி தொடர்புடைய சயின்ஸ் திரில்லர் படம் எனவும்தகல்வல்கள் வெளியாகியுள்ளது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)