producer Chandrasekha case

Advertisment

கன்னட திரையுலகில் நடிகராகவும் தயாரிப்பாளராகவும் வலம் வருபவர் சந்திரசேகர். தனது மனைவிநமிதாபோதைப்பொருள் கடத்தல்காரனுடன் தொடர்பு வைத்திருப்பதாகக் கூறி காவல் நிலையத்தில் இவர் புகார் கொடுத்துள்ளார்.

காவல் நிலையத்தில் அவர் அளித்துள்ள புகாரில், "என் மனைவி போதைக்கு அடிமையானவர். அதனால் போதைப்பொருள் வியாபாரி லக்‌ஷ்மிஷ் பிரபு என்பவருடன் தகாத உறவில் இருந்து வருகிறார். லக்‌ஷ்மிஷ் பிரபு நான் வீட்டில் இல்லாத நேரத்தில் எனது வீட்டிற்கு அடிக்கடி வந்து செல்கிறார். ஒரு நாள் இருவரும் கையும் களவுமாக என்னிடம் மாட்டிக்கொண்டனர்" எனக் குறிப்பிட்டுள்ளார்.

இதையடுத்து நமிதாகணவரின் குற்றச்சாட்டுகளை எதிர்த்து அவர் மீது காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரில், "என் கணவர் என் மீது பொய்யான குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார். லக்‌ஷ்மிஷ் பிரபு என்னுடைய நண்பர் தான்" எனக் குறிப்பிட்டுள்ளார். மேலும் தனது கணவர் நண்பரை தாக்கியதாகவும் குற்றம் சாட்டியுள்ளார். இரு புகார்களையும் வாங்கிக் கொண்ட போலீசார் தற்போது விசாரணை நடத்தி வருகின்றனர்.