ADVERTISEMENT

ஆளுநரை சந்தித்த தமிழ் திரைப்பட துறையினர் 

06:15 PM May 02, 2018 | santhosh


தமிழ் நாட்டில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும், தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூட வேண்டும் என்ற கோரிக்கைகளை நிறைவேற்ற கோரி பல்வேறு அமைப்புகள் சார்பில் தொடர் போராட்டம் நடந்து வந்த நிலையில், நடிகர் ,நடிகைகள் மற்றும் மொத்த சினிமா துறையினரும் சேர்ந்து காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வற்புறுத்தியும், ஸ்டெர்லைட் ஆலையை மூட வற்புறுத்தியும் சென்னையில் மவுன போராட்டம் நடத்தினர். அப்போது போராட்டத்தின் போது, காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்றும், தமிழ்நாட்டின் உரிமையை மீட்க வேண்டும் என்றும், மேலும் இதற்கு மத்திய, மாநில அரசுகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டு திரை உலகினர் அதில் கையெழுத்து போட்டு இருந்தனர். இந்த நிலையில் தமிழ் திரைப்பட துறையினர் சார்பில் நடிகர்கள் விஷால், நாசர், இயக்குனர்கள் ஆர்.கே.செல்வமணி, பொன்வண்ணன், விக்ரமன் உள்ளிட்டோர் இன்று கவர்னர் மாளிகை சென்று தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித்தை சந்தித்து காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரி தமிழ் திரைப்பட துறையினர் சார்பில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை கவர்னரிடம் கொடுத்தனர். அப்போது காவிரி மேலாண்மை வாரியம் விரைவில் அமைக்க மத்திய அரசிடம் வற்புறுத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். பின்னர் நிருபர்களிடம் இது குறித்து இவர்கள் பேசியபோது...."காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரும் மனுவில் ரஜினி, கமல், விஜய் உள்பட திரை உலகைச் சேர்ந்த 5 ஆயிரம் பேர் கையெழுத்திட்டு இருந்தனர். அந்த மனுவை ஏற்கனவே திட்டமிட்டப்படி இன்று கவர்னரிடம் கொடுத்தோம். மனுவை பெற்றுக் கொண்ட அவர் இன்னும் இரண்டு வாரங்களில் காவிரி மேலாண்மை வாரியம் அமையும் என்று நம்பிக்கை தெரிவித்தார். மேலும் மனுவின் நகல் முதல்அமைச்சருக்கு அனுப்பப்படும் என்றும் கூறினர். இதைத்தொடர்ந்து ஸ்டெர்லைட் ஆலையை மூட வேண்டும் என்றும் வற்புறுத்தினோம். மனுவிலும் அதை குறிப்பிட்டுள்ளோம். இதற்கும் உரிய நடவடிக்கை எடுப்பதாக கவர்னர் கூறினார்" என்றனர்.

ADVERTISEMENT
ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT