Priyanka Mohan Plays important role rajinikanth thalaivar169 film

Advertisment

'அண்ணாத்த' படத்தை தொடர்ந்து நடிகர் ரஜினிகாந்த் 'பீஸ்ட்' படத்தை இயக்கி வரும் நெல்சன் திலீப்குமார் இயக்கும் புதிய படத்தில் நடிக்கவுள்ளார். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கவுள்ளார். தற்காலிகமாக 'தலைவர் 169'என பெயரிடப்பட்டுள்ள இப்படத்தில் காமெடி கதாபாத்திரத்தில் வடிவேலு நடிக்கவிருப்பதாகக்கூறப்படுகிறது.

இந்நிலையில் இப்படத்தில் நடிகை பிரியங்கா மோகன் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இப்படத்தில் ரஜினிக்கு ஜோடியாக அவர் நடிக்கவில்லை என்றும், வேறொரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாகவும் சினிமா வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. மேலும் இப்படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நடிக்க ஐஸ்வர்யா ராயிடம் பேச்சு வார்த்தை நடைபெற்றதாகவும், விரைவில் இது குறித்த அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.