Advertisment

விஜய்க்கு ஜோடியாகும் பிரியங்கா மோகன்

priyanka mohan to pair with vijay in thalapathy 68

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகி வரும் படம் 'லியோ'. இப்படத்தில் கதாநாயகியாக திரிஷா நடிக்க பிரபல பாலிவுட் நடிகர் சஞ்சய் தத், அர்ஜுன், மன்சூர் அலி கான், பிரியா ஆனந்த், இயக்குநர்கள் மிஷ்கின், கௌதம் மேனன் என ஒரு பெரிய நட்சத்திரப் பட்டாளமே நடித்துள்ளனர். இப்படம் வருகிற அக்டோபர் 19 ஆம் தேதி வெளியாகவுள்ளது.

Advertisment

படத்தின் முதல் பாடல், 'நா ரெடி...', மற்றும் சஞ்சய் தத், அர்ஜுன் உள்ளிட்டோரின் கதாபாத்திர முன்னோட்ட வீடியோக்கள் அவரவர்களது பிறந்தநாளை முன்னிட்டு வெளியானது. இசை வெளியீட்டு விழா செப்டம்பரில் நடக்கவுள்ளதாக முன்பு லோகேஷ் கனகராஜ் தெரிவித்த நிலையில், விரைவில் அதன் அப்டேட் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisment

இப்படத்தை முடித்துவிட்டு வெங்கட் பிரபு இயக்கத்தில் ஏ.ஜி.எஸ் தயாரிப்பில் யுவன் ஷங்கர் ராஜா இசையில்விஜய்நடிக்கவுள்ளார். இப்படத்திற்கு 'சிஎஸ்கே' என தலைப்பு வைக்கப்பட்டதாகவும், கதாநாயகியாக ஜோதிகாவிடம் பேச்சு வார்த்தை நடந்து வருவதாகவும் முன்பு தகவல் வெளியானது. அண்மையில் படப்பிடிப்பு செப்டம்பரில் நடக்கவுள்ளதாகவும் படப்பிடிப்பு அக்டோபரில் ஆரம்பிக்கவுள்ளதாகவும் பரவலாகப் பேசப்பட்டது.

இதையடுத்து அண்மையில் விஜய் இரண்டு கதாபாத்திரங்களில் நடிக்கவுள்ளதாகக் கூறப்பட்டது. இந்நிலையில் படத்தில் இன்னொரு கதாநாயகியாக பிரியங்கா மோகன் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாகத்தகவல் வெளியாகியுள்ளது. இத்தகவல் உறுதியாகும் பட்சத்தில் முதல் முறையாக விஜய்யுடன் இணைந்து நடிக்கவுள்ளார். இப்போது தனுஷுடன் 'கேப்டன் மில்லர்' படத்தில் நடித்து வருகிறார். தெலுங்கில் பவன் கல்யாணுடன் 'ஓஜி' படத்தில் நடிக்கிறார்.

actor vijay priyanka mohan thalapathy 68 venkat prabhu vijay 68
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe