Priyanka Mohan to pair up with Jayam Ravi - Official announcement released

நடிகர் ஜெயம் ரவி தற்போது 'பொன்னியின் செல்வன்' படத்தில் நடித்து முடித்துள்ளார். இப்படம் வருகிற செப்டம்பர் 30-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. அதனைத்தொடர்ந்து 'ஜன கன மன', 'அகிலன்' என்ற படத்தில் நடிக்கிறார். பின்பு மீண்டும் 'ஜன கன மன' படத்தை இயக்கிய அஹ்மத் இயக்கும் அடுத்த படத்திலும் நடித்து வருகிறார். இதனிடையே ஸ்க்ரீன் சீன் நிறுவனம் தயாரிப்பில் ராஜேஷ் இயக்கும் புதிய படத்தில் ஜெயம் ரவி நடிக்கவுள்ளார். இப்படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்கவுள்ளார். இதற்கான அறிவிப்பு சில மாதங்களுக்கு முன்பு வெளியானது.

Advertisment

இந்நிலையில் இப்படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கி படப்பிடிப்பு நடைபெற்றுவருகிறது. ஜெயம் ரவியின் 30-வது படமான இப்படத்தில் ஜெயம் ரவிக்கு ஜோடியாக பிரியங்கா மோகன் நடிக்கிறார். மேலும் நட்டி மற்றும் விடிவி கணேஷ் உள்ளிட்ட சிலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளனர். பூஜை நிகழ்ச்சியின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்களை தற்போது தயாரிப்பு நிறுவனம் தங்களது சமூக வலைதளபக்கத்தில் வெளியிட்டுள்ளது.

Advertisment