Advertisment

தனுஷுக்கு ஜோடியான பிரியங்கா மோகன் - உறுதி செய்த படக்குழு

priyanka mohan is pair with dhaush in captain miller movie

தனுஷ் தற்போது 'நானே வருவேன்' மற்றும் 'வாத்தி' படத்தில் நடித்துமுடித்துள்ளார். இதில் 'நானே வருவேன்' இம்மாதம் வெளியாகிறது. ரிலீஸ் தேதி இன்னும் அறிவிக்கப்படவில்லை. வாத்தி படம் வருகிற டிசம்பர் 2-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இதனிடையே அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் 'கேப்டன் மில்லர்' படத்தில் நடிக்கிறார். 'சத்ய ஜோதி ஃபிலிம்ஸ்' நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தில் சந்தீப் கிஷான் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். ஜி.வி பிரகாஷ் இசையமைக்கவுள்ள இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

Advertisment

இந்நிலையில், 'கேப்டன் மில்லர்' படத்தின் கதாநாயகி குறித்த அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது. முன்னதாக இந்தப் படத்தில் பிரியங்கா மோகன் கதாநாயகியாக நடிக்கவுள்ளார் என தகவல் வெளியாகியிருந்த நிலையில், தற்போது படக்குழு அதனை உறுதி செய்துள்ளது. பிரியங்கா மோகன் தற்போது ராஜேஷ் இயக்கத்தில் ஜெயம் ரவி நடிப்பில் உருவாகும் பெயரிடாத படத்தில் கதாநாயகியாக நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisment

Captain Miller priyanka mohan director arun matheswaran actor dhanush
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe