/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/Untitled-1_362.jpg)
செல்வராகவன் இயக்கும் 'நானே வருவேன்' படத்தில் நடித்து முடித்துள்ள தனுஷ் தற்போது 'வாத்தி' படத்தில் நடித்து வருகிறார். தெலுங்கு இயக்குநர் வெங்கி அட்லூரி இயக்கும் இப்படத்தில் கதாநாயகியாக சம்யுக்தா மேனன் நடிக்கிறார். இதனிடையே அருண் மாதேஸ்வரன் இயக்கும் அடுத்த படத்தில் தனுஷ் நடிக்கவுள்ளார். இப்படத்தை 'சத்யா ஜோதி ஃபிலிம்ஸ்' சார்பாக தியாகராஜன் தயாரிக்கிறார் . 'கேப்டன் மில்லர்' என இப்படத்திற்கு தலைப்பு வைக்கப்பட்டு டார்க் காமெடி ஜானரில் உருவாகவுள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் 'கேப்டன் மில்லர்' படத்தில் பிரியங்கா மோகன் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இப்படத்தில் தனுஷுக்கு ஜோடியாக பிரியங்கா மோகன் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. இதற்காக பிரியங்கா மோகனிடம் படக்குழு பேச்சுவார்த்தை நடத்தியுள்ளதாக திரை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
ரூசோ பிரதர்ஸ் இயக்கத்தில் தனுஷ் ஹாலிவுட்டில் அறிமுகமாகும் 'தி கிரே மேன்' படம் ஜூலை 22-ஆம் தேதி நெட் ஃப்ளிக்ஸ் ஓடிடி தளத்தில் நேரடியாக வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)