/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/Tiktok-Stills-011.jpg)
ஃபேன் மேட் பிக்சர்ஸ் சார்பில் காமெடி கலந்த ஹாரர் த்ரில்லராக தயாராகி வரும் படம் 'டிக்டாக்'. இந்தப்படத்தை தயாரிப்பதுடன் படத்தை இயக்கியும் உள்ளார் மதன். 'எங்கிட்ட மோதாதே' படத்தை இயக்கிய ராமு செல்லப்பா இந்தப்படத்தின் கதையை எழுதியுள்ளார். மூடர்கூடம் ராஜாஜி, கதாநாயகனாக நடித்துள்ள இந்தப்படத்தில் கதாநாயகியாக சுஷ்மா ராஜ் நடித்துள்ளார். இவர் இந்தியா பாகிஸ்தான் படத்தில் விஜய் ஆண்டனிக்கு ஜோடியாக நடித்தவர். மேலும், சிவகார்த்திகேயன் ஜோடியாக டாக்டர் மற்றும் டான் படத்தில் நடித்துள்ள பிரியங்கா மோகன் இதில் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். இவர்களுடன் சாம்ஸ், முருகானந்தம், வினோதினி, நமோ நாராயணன் உள்ளிட்ட பலர் இதில் நடித்துள்ளனர்.
மிகப்பெரிய மால் ஒன்றில் 'scary house' எனப்படும் பேய்வீடு செட் அமைத்து பார்வையாளர்களுக்கு ‘த்ரில்’ வழங்கும் வேலையை செய்து வருகின்றனர் நாயகனும் நாயகியும். இந்த வீட்டில் நிஜமான பேய் ஒன்று நுழைவதும் அதன்பின் நடக்கும் நிகழ்வுகளையும் காமெடி, த்ரில் என கலந்து படமாக்கியுள்ளார்கள். இந்தப்படத்தின் படப்பிடிப்பு முழுவதும் கோவையிலேயே நடைபெற்றுள்ளது.. மேலும் பிரமாண்டமான பேய் வீடு செட் ஒன்றையும் அமைத்து அதில் பல நாட்கள் படப்பிடிப்பு நடத்தியுள்ளனர். விரைவில் இந்தப்படத்தின் இசைவெளியீடு நடக்கவுள்ளது. படத்தை மார்ச் மாதம் தியேட்டர்களில் ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளனர்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/member_avatars/2026/02/28/2026-02-28t064820155z-nlogo-2026-02-28-12-18-18.jpg)