Advertisment

பிக்பாஸ் ரித்விகா வெற்றி... எதிர்கும் விஜய் டிவி ஆங்கர் 

priyanka

பிக்பாஸ் 2வது சீஸனின் வெற்றியாளராக ரித்விகா சமீபத்தில் அறிவிக்கப்பட்டார். இதற்கு பல்வேறு தரப்பிலுருந்து வாழ்த்துக்கள் குவிந்தவண்ணம் இருக்கும் நிலையில் பிரபல தொலைக்காட்சியின் தொகுப்பாளினியான பிரியங்கா தேஷ் பாண்டே ரித்விகா ஆதரவாளர்களுக்கு எதிராக கருத்து தெரிவித்துள்ளார். இவர் சமீபத்தில் அளித்த பேட்டியில் இதுகுறித்து பேசியபோது... "தமிழ் மக்கள் ஜெயிக்க வேண்டும் என்றும், தமிழனா இருந்தா செய் என்றும் சொல்வது எல்லாம் எனக்கு பிடிக்காது. கிரிக்கெட் விளையாடும் போது மட்டும் இந்தியா என்றும், மற்ற நேரத்தில் தமிழ், ஹிந்தி என பிரிக்கிறீர்கள். நாம் வேலை செய்யும் இடத்தில் உண்மையாக உழைக்க வேண்டும். பிக்பாஸ் நிகழ்ச்சியில் தமிழ் பெண்தான் ஜெயிக்கவேண்டும் என்றெல்லாம் பேசினார்கள். நாளைக்கே அவர்களுக்கு ஷாருக்கானுடன் நடிக்கும் வாய்ப்பு வந்தால் போக மாட்டார்களா, இல்லை தமிழ் என்று சொல்லிக் கொண்டு இருப்பார்களா. என்றைக்குமே உங்களது உழைப்பு தான் ஜெயிக்கும்" என்றார்.

Advertisment

kamalhassan kamal bigboss
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe