
ப்ரியங்கா சோப்ரா எழுதியுள்ள சுயசரிதையான ‘அன்ஃபினிஷ்டு’ புத்தகம் வெளியீட்டுக்குத் தயாராக உள்ளது.
கடந்த 2000ஆம் ஆண்டில் உலக அழகி பட்டம் வென்ற நடிகை ப்ரியங்கா சோப்ரா. இதனைத் தொடர்ந்து நடிகர் விஜயுடன் 'தமிழன்' படத்தில் நடிகையாக அறிமுகமானார். இதன்பின் முழுக்க முழுக்க பாலிவுட்டில் நடித்து உட்ச நட்சத்திரமானார்.
ஹாலிவுட்டிலும் நடிக்க தொடங்கிய ப்ரியங்கா சோப்ரா நிக் ஜோன்ஸ் என்னும் பாப் பாடகரை திருமணம் செய்துகொண்டுள்ளார். இந்நிலையில் 38 வயதாகும் ப்ரியங்கா சோப்ரா தன் வாழ்வில் நடந்த சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு ‘அன்ஃபினிஷ்டு’ என்ற சுயசரிதை புத்தகத்தை எழுதி வந்தார். தற்போது அந்தப் புத்தகத்தை எழுதி முடித்துவிட்டதாகவும் விரைவில் பதிப்பிக்கப்பட்டு புத்தகமாக வெளியாகும் என்றும் ப்ரியங்கா தெரிவித்துள்ளார்.
‘அன்ஃபினிஷ்டு’ புத்தகத்தை பென்குயின் ரேண்டம் ஹவுஸ் என்ற பதிப்பகம் விரைவில் வெளியிடுகிறது.