Priyanka Chopra reveals she cried to Nick Jonas after she was body shamed

தமிழில் விஜய் நடித்த தமிழன்படத்தின் மூலம் அறிமுகமான பிரியங்கா சோப்ரா, பின்பு பாலிவுட்டில் கவனம் செலுத்தி அங்கு முன்னணி நடிகையாக வலம் வருகிறார். அவர் புதிதாக நடித்துள்ள வெப் தொடர் 'சீட்டடெல்'. இத்தொடர் அமேசான் ப்ரைமில் அடுத்த மாதம் 28 ஆம் தேதி வெளியாகவுள்ளது.

Advertisment

இந்த நிலையில் அமெரிக்காவில் நடந்த ஒரு சர்வதேச திரைப்பட நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ளார். அப்போது அவருடன் ஒரு நேர்காணல் எடுத்தபோது பல்வேறு நிகழ்வுகளை அவர் பகிர்ந்துள்ளார். அதில்,"சில விஷயங்கள் கேட்கவே கஷ்டமாக இருக்கும். அண்மையில் கூட என் உடல் அமைப்பு குறித்து ஒருவர்கிண்டலடித்தார். அது என்னை காயப்படுத்தியது. இது குறித்து என் குடும்பத்தாரிடம் விவாதித்தேன். மேலும் என் கணவருடன் சொல்லி அழுதேன். ஒருவர் போதுமானஅளவு தான் உடல் எடை இருக்க வேண்டும். அப்படி இலையென்றால் அது ஒரு பிரச்சனையாக மாறுகிறது" என்று மிக வருத்தத்துடன் பேசினார்.

Advertisment

மேலும் சீட்டடெல் படத்தில்தான் தனக்கு முதன்முறையாக சக நடிகருக்கு இணையான சம்பளம் வழங்கப்பட்டு இருப்பதாக பேசியுள்ளார். அவர் பேசுகையில், "கிட்டத்தட்ட 22 வருடங்களாக சினிமா துறையில் இருக்கிறேன். 70க்கும் மேற்பட்ட படங்களிலும், இரண்டு டிவி நிகழ்ச்சிகளிலும் நான் பணியாற்றி உள்ளேன். நானும் சக நடிகர் வழங்கும் அதே அளவிலான உழைப்பைத்தான் கொடுக்கிறேன். ஆனால் எனக்கு குறைவான சம்பளமே கொடுக்கப்பட்டது. ஆனால் என்னுடைய கரியரில் முதன்முறையாக சக நடிகருக்கு இணையான சம்பளத்தை இந்த தொடரில் பெற்றுள்ளேன்" என்றார்.