priyanka chopra photos goes viral

Advertisment

கடந்த 2000ஆம் ஆண்டில் உலக அழகிப் பட்டம் வென்றவர் ப்ரியங்கா சோப்ரா. இதனைத் தொடர்ந்து நடிகர் விஜய்யுடன் 'தமிழன்' படத்தில் நடிகையாக அறிமுகமானார். இதன்பின் முழுக்க முழுக்க பாலிவுட்டில் நடித்து உச்ச நட்சத்திரமானார்.ஹாலிவுட்டிலும் நடிக்கத் தொடங்கிய ப்ரியங்கா சோப்ரா, நிக் ஜோன்ஸ் என்னும் பாப் பாடகரைக் கடந்த 2018ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டுசமீபத்தில் வாடகைத் தாய் மூலம் குழந்தை பெற்றெடுத்து கொண்டார்.

இந்நிலையில் உடல் எடை கூடிகுண்டாக இருக்கும் ப்ரியங்கா சோப்ராவின் தற்போதைய புகைப்படங்கள் வெளியாகியுள்ளது. எப்போதும் ஸ்லிம்மாகவும், கச்சிதமான உடல் கட்டோடும்இருக்கும் ப்ரியங்கா சோப்ரா தற்போது குண்டாக மாறியுள்ள புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளனர்.சமீபத்தில் அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் பிரியங்கா சோப்ரா ஷாப்பிங் செய்தபோது எடுக்கப்பட்ட இப்புகைப்படம் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.