தமிழில் விஜய் நடித்த 'தமிழன்' படத்தின் மூலம் அறிமுகமான பிரியங்கா சோப்ரா, பின்பு பாலிவுட்டில் கவனம் செலுத்தி அங்கு முன்னணி நடிகையாக வலம் வருகிறார். இப்போது பாலிவுட் மட்டுமல்லாது ஹாலிவுட்டிலும் கவனம் செலுத்தி வருகிறார். இவர் நடிப்பில் ஹாலிவுட்டில் உருவாகியுள்ள 'சீட்டடெல்' வெப் தொடர் அமேசான் ப்ரைமில் வருகிற 28 ஆம் தேதி (28.04.2023) வெளியாகவுள்ளது. இதனால் தற்போது ப்ரோமோஷன் பணிகளில் பிசியாக உள்ளார்.
கடந்த மாதம் ஒரு பேட்டியில், பாலிவுட் திரையுலகம், ஆர்.ஆர்.ஆர் படம் உட்பட பல்வேறு விஷயங்களை பகிர்ந்த பிரியங்கா சோப்ரா, "ஆர்.ஆர்.ஆர் ஒரு தமிழ்ப் படம். அது மிகப்பெரிய பிளாக்பஸ்டர் தமிழ் படம். இது எங்களின் அவெஞ்சர்ஸ் படம் போன்றது" எனக் கூறியிருந்தார். இவரது பேச்சு தெலுங்கு ரசிகர்கள் மத்தியில் ஒரு சலசலப்பை ஏற்படுத்தியது. மேலும் சமூக வலைத்தளங்களில் தெலுங்கு படத்தை ஏன் தமிழ் படம் எனக் கூறுகிறார் என சர்ச்சை எழுந்தது.
இந்த நிலையில் அந்த சர்ச்சை குறித்து தற்போது விளக்கமளித்துள்ளார். இது தொடர்பாக ஒரு பேட்டியில் பேசிய அவர், "நான் எதை செய்தாலும் அதில் தவறை கண்டுபிடிக்க முயற்சிக்கிறார்கள். அதை அவர்கள் ரசிக்கிறார்கள். முன்பு சுதந்திர மனப்பான்மையோடு இருந்தேன். ஆனால் இப்போதுகுடும்பத்தைப் பற்றி சிந்திக்க வேண்டியுள்ளதால் சற்று கவனமாக இருக்கிறேன். அதே சமயம்வாழ்க்கையில் நீங்கள் உயர்ந்த இடத்திற்கு செல்லும்போது, நிறைய பேர்அதை வீழ்த்தஒரு காரணத்தை தேடுகிறார்கள். அது போலத்தான் ஆர்ஆர்ஆர் பட சர்ச்சையும். அதே நேரத்தில்எனது குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் ரசிகர்களிடமிருந்து எனக்கு மிகுந்த அன்பும் ஆதரவும் உள்ளது. நான் அதில் கவனம் செலுத்த விரும்புகிறேன்" என்றார்.