Advertisment

வாடகைத் தாய் மூலம் குழந்தை பெற்றெடுத்த ப்ரியங்கா சோப்ரா

Priyanka Chopra mother child by surrogate mother

Advertisment

கடந்த 2000ஆம் ஆண்டில் உலக அழகிப் பட்டம் வென்றவர் ப்ரியங்கா சோப்ரா. இதனைத் தொடர்ந்து நடிகர் விஜய்யுடன் 'தமிழன்' படத்தில் நடிகையாக அறிமுகமானார். இதன்பின் முழுக்க முழுக்க பாலிவுட்டில் நடித்து உச்ச நட்சத்திரமானார்.ஹாலிவுட்டிலும் நடிக்கத் தொடங்கிய ப்ரியங்கா சோப்ரா, நிக் ஜோன்ஸ் என்னும் பாப் பாடகரைக் கடந்த 2018ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார். அதனைத் தொடர்ந்து, ப்ரியங்கா சோப்ரா படங்களிலும் தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்துவருகிறார்.

இந்நிலையில்,பிரியங்கா சோப்ரா மற்றும் நிக் ஜோன்ஸ்இருவரும் வாடகைத் தாய் மூலம் குழந்தைபெற்றெடுத்துள்ளதாகத் தங்கள்சமூக வலைதளப்பக்கத்தில் அறிவித்துள்ளனர். மேலும் இந்தச் சிறப்பான நேரத்தில் தங்களதுகுடும்பம் குறித்து கவனம் செலுத்த உள்ளதால்தனிப்பட்ட விஷயங்களுக்கு மதிப்பளிக்க வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டுள்ளனர்.

hollywood nick jonas Priyanka chopra
இதையும் படியுங்கள்
Subscribe