Advertisment

ஒரு வாரத்திற்குள்ளாகவே இரண்டு சர்ச்சைகளில் சிக்கிய பிரியங்கா சோப்ரா....

நடிகை பிரியங்கா சோப்ரா எதாவது சமூக அக்கறையை வெளிகாட்டுகிறேன் என்று தன்னை காட்டிக்கொள்ளும்போதெல்லாம் அது சர்ச்சையாகி மக்களின் விமர்சனத்திற்கு ஆளாகி வருகிறார். அந்த வரிசையில் கடந்த நான்கு நாட்களுக்கு முன்பு டெல்லி காற்று மாசு குறித்து உருக்கமாக பதிவு ஒன்றை போட்டார். அதில் முகத்தில் முகமூடி அணிந்து புகைப்படமும் பகிர்ந்திருந்தார். இதன்பின் பொதுமக்கள் ஆமாம், நீங்கள் மட்டும் உங்கள் வீட்டு திருமணத்திற்கு பட்டாசு கொழுத்துவீர்கள். ஆனால், எங்களை பட்டாசு குழ்த்த வேண்டாம். காற்று மாசுப்படுகிறது என்று சொல்வீர்கள் என்றும், அவர் நிக்குடன் சிகரெட் புகைத்த படத்தையும் சமூக வலைதளத்தில் பகிர்ந்து பிரியங்கா சோப்ராவை விமர்சித்து வந்தார்கள்.

Advertisment

priyanka chopra

இந்த சர்ச்சை ஓய்வதற்குள் அடுத்த சர்ச்சையில் சிக்கியுள்ளார் பிரியங்கா சோப்ரா. இந்த நிலையில் பிரியங்கா சோப்ரா ட்விட்டர் பக்கத்தில் புதிதாக வெளியிட்டுள்ள ஐஸ்கிரீம் படமும் சர்ச்சையை கிளப்பி உள்ளது. வரிசையாக அடுக்கி வைத்த 500 ரூபாய் நோட்டுகளுக்கு மத்தியில் ஐஸ்கிரீமை வைத்து பிரியங்கா சோப்ரா சாப்பிடுவதுபோல் அந்த புகைப்படம் உள்ளது.

Advertisment

alt="miga miga avasaram" data-align="center" data-entity-type="file" data-entity-uuid="798e0444-1c87-4431-b480-d7e438ca5ef7" src="https://www.nakkheeran.in/sites/default/files/inline-images/500X300-02_24.jpg" />

சாப்பாட்டுக்கு வழி இல்லாத ஏழைகள் வாழும் நாட்டில் 500 ரூபாய்களுக்குள் ஐஸ்கிரீமை வைத்து சாப்பிடுவதா? காந்திஜி புகைப்படம் பதித்த ரூபாய் நோட்டை ஐஸ்கிரீமுக்குள் வைத்து அவமதித்த செயல் கண்டிக்கத்தக்கது என்று கருத்துக்கள் பதிவிடுகிறார்கள். இன்னும் சிலர் அது போலியான 500 ரூபாய் நோட்டு என்று பிரியங்காவுக்கு ஆதரவாக பேசுகின்றனர்.

Priyanka chopra
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe