Priyanka Chopra

புதிய வேளாண் சட்டங்களை எதிர்த்து டெல்லியில் விவசாயிகள் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர். 12 நாட்களாக நீடித்து வரும் விவசாயிகளின் இந்தப் போராட்டத்திற்கு நாடு முழுவதும் ஆதரவுபெருகிவருகிறது. பல்வேறு அரசியல் கட்சிகள் இப்போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து வரும் வேளையில், பிரபல இந்திநடிகையான பிரியங்கா சோப்ராவும் தனது ஆதரவைத் தெரிவித்துள்ளார்.

Advertisment

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், "நமது விவசாயிகள் நம் நாட்டின் உணவைஉற்பத்தி செய்யும் வீரர்கள். அவர்களது பயம் தீர்க்கப்பட வேண்டும். அவர்களது நம்பிக்கை பூர்த்தி செய்யப்படவேண்டும். வளர்ந்து வரும் ஜனநாயக நாடாக, இந்த விவகாரத்தில் விரைந்து முடிவெடுப்பதை உறுதி செய்யவேண்டும்" எனக் குறிப்பிட்டுள்ளார்.

Advertisment