Advertisment

பிறந்தநாள் கேக்கிற்காக லட்சக் கணக்கில் செலவு செய்த பிரபல நடிகை...

நடிகை பிரியங்கா சோப்ரா கடந்த 2000ஆம் ஆண்டில் உலக அழகி பட்டத்தை பெற்றார். இதனையடுத்து பாலிவுட்டில் நடிகையாக வலம் வந்தார். பல்வேறு கதாபாத்திரங்களில் நடித்தார். ஹீரோவுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கதைகளில் ஜோடியாக நடிக்கும் நடிகையாக இல்லாமல், தனக்கென முக்கியத்துவம் கொடுக்கும் கதாபாத்திரங்களில் நடித்து ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தார்.

Advertisment

priyanka chopra

இதனையடுத்து ஹாலிவுட் படங்களில் நடிக்கவும் ஒப்பந்தம் செய்யப்பட்டார். ஆங்கில தொடரன குவாண்டிகோவில் நடித்து அசத்தினார். தற்போது பாலிவுட் அதிக சம்பளம் பெரும் நடிகைகளில் முதன்மையானவராக பிரியங்கா இருந்தபோது நிக் ஜோனஸ் என்ற பாப் பாடகரை திருமணம் செய்துகொண்டார். ஹாலிவிட்டில் மிகவும் பிரபலமான நிக் ஜோனஸை இந்தியாவைச் சேர்ந்த பிரியங்கா திருமணம் செய்துகொண்டது பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. வெகு விமர்சியையாக நடைபெற்றது இவர்களின் திருமணம்.

Advertisment

இந்நிலையில், தனது 37வது பிறந்தநாளை கடந்த ஜூலை 18ஆம் தேதி கணவர் நிக் ஜோனஸுடன் கொண்டாடினார் பிரியங்கா. அப்போது பிரியங்கா வெட்டிய கேக்கும் ஃபேமஸானது. மூன்று அடுக்கு கேக்கான இதன் விலை தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. தங்க துகள்கள் தூவப்பட்ட இந்த கேக்கின் விலை சுமார் மூன்றரை லட்சமாம்.

Priyanka chopra
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe