/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/prianka.jpg)
கடந்த 2000ஆம் ஆண்டில் உலக அழகி பட்டம் வென்றவர் ப்ரியங்கா சோப்ரா. இதனைத் தொடர்ந்து நடிகர் விஜயுடன் 'தமிழன்' படத்தில் நடிகையாக அறிமுகமானார். இதன்பின் முழுக்க முழுக்க பாலிவுட்டில் நடித்து உச்ச நட்சத்திரமானார்.ஹாலிவுட்டிலும் நடிக்க தொடங்கிய ப்ரியங்கா சோப்ரா, நிக் ஜோன்ஸ் என்னும் பாப் பாடகரைத் திருமணம் செய்துகொண்டார். அதனைத் தொடர்ந்து பிரியங்கா சோப்ரா படங்களிலும், தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்துவருகிறார். சமூக வலைதளங்களில் ஆக்ட்டிவாகஇருக்கும் ப்ரியங்கா சோப்ரா தனது அன்றாட நிகழ்வுகளைப் புகைப்படம் எடுத்து பதிவிடுவார்.
இந்நிலையில், நடிகை ப்ரியங்கா சோப்ரா தனது கணவர் நிக் ஜோன்ஸை விவாகரத்து செய்யவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நடிகை ப்ரியங்கா சோப்ரா, சமூகவலைதளப் பக்கத்தில் தன் பெயருக்குப் பின்னால் இருக்கும் கணவர் பெயரைநீக்கியுள்ளார். சமீபத்தில், நடிகை சமந்தா தனது கணவர் நாகசைதன்யாவை விவாகரத்து செய்தார். அதற்கு முன்பு சமந்தா சமூக வலைதளப் பக்கத்தில் தன் பெயருக்குப் பின்னால் இருந்த கணவர் பெயரை நீக்கியிருந்தது குறிப்பிடத்தக்கது. இதனைத் தொடர்ந்து சமந்தாவைபோல ப்ரியங்காசோப்ராவும் தன் பெயருக்குப் பின்னால் இருந்த கணவர் பெயரை நீக்கியுள்ளதால்இருவரும் விவாகரத்து செய்யப் போகிறார்கள் என்ற கோணத்தில் ரசிகர்கள் சமூக வலைத்தளத்தில் விவாதித்துவருகின்றனர். ஆனால், இதுகுறித்து எந்த ஒரு அதிகாரபூர்வ விளக்கமும்ப்ரியங்காசோப்ரா தரப்பிலிருந்து வெளியிடப்படவில்லை.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/member_avatars/2026/02/28/2026-02-28t064820155z-nlogo-2026-02-28-12-18-18.jpg)