Advertisment

"ஆடைகளை அகற்றச் சொல்லி வற்புறுத்தினார்" - பிரியங்கா சோப்ரா பகீர் குற்றச்சாட்டு

Advertisment

priyanka chopra accusses bollywood film director

தமிழில் விஜய் நடித்த 'தமிழன்' படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமான பிரியங்கா சோப்ரா, பாலிவுட்டில் கவனம் செலுத்தி அங்கு முன்னணி நடிகையாக வலம் வருகிறார். இப்போது பாலிவுட் மட்டுமல்லாது ஹாலிவுட்டிலும் கவனம் செலுத்தி வருகிறார். இவர் நடிப்பில் ஹாலிவுட்டில் உருவாகியுள்ள 'சீட்டடெல்' வெப் தொடர் கடந்த மாதம்28 ஆம் தேதிஅமேசான் ப்ரைமில் வெளியானது.

Advertisment

இந்நிலையில் தனது திரைப்பயணத்தில் நடக்கும் அனுபவங்கள் குறித்து அவ்வப்போது பேட்டிகளில் பேசிவருகிறார். அதில் அதிர்ச்சிகரமான பல தகவல்களையும் பகிர்ந்திருந்தார். அண்மையில்மாட்டிறைச்சி சாப்பிட்டதற்காக பாலிவுட்டில் இருந்து ஓரங்கட்டப்பட்டதாகக் கூறியிருந்தார்.அந்த வகையில் மேலும் ஒரு அதிர்ச்சிகரதகவலைபகிர்ந்துள்ளார் பிரியங்காசோப்ரா.

இதனைஒரு ஆங்கில ஊடகத்தில் சொன்ன அவர், இது பற்றி விரிவாகக் கூறுகையில், "2002-2003 ஆம் ஆண்டுகளில் ரகசிய ஏஜெண்ட்டாகஒரு பாலிவுட் படத்தில் நடித்து வந்தேன். அப்போது ஒரு காட்சியில் ஒரு ஆணை வசியம் செய்ய வேண்டும். அதில் ஆடைகளை அவிழ்த்து உள்ளாடைகளுடன் அந்த நபரை மயக்க வேண்டும் என இயக்குநர் சொன்னார். அதனால்ஸ்கின் ட்ரெஸ்(Skin dress) அணிந்து கொண்டு நடிப்பதாகச் சொன்னேன். ஆனால், அந்த இயக்குநர்ஸ்கின் ட்ரெஸ்இல்லாமல் உள்ளாடைகளுடன் நடிக்க வேண்டும் என வற்புறுத்தினார். மேலும் இதைப் பார்க்கத்தான் ரசிகர்கள் வருவார்கள் என ஆபாசமாகப் பேசினார்" என்றார்.

தொடர்ந்து பேசிய அவர், "இந்த விஷயத்தை அந்த இயக்குநர்என்னிடம் சொல்லவில்லை. என் எதிரில் இருந்த ஒப்பனையாளரிடம் சொன்னார். அது ஒரு மனிதாபிமானமற்ற தருணம்" என்றார். பின்பு தனது அப்பாவின் அறிவுறுத்தலின் படி அப்படத்திலிருந்துவிலகிவிட்டேன். மொத்தம் 2 நாட்கள் நடித்திருந்த நிலையில் அதற்கான செலவுகளை படக்குழுவிடம் திருப்பி கொடுத்துவிட்டதாகத்தெரிவித்தார். அந்த இயக்குநர் பெயரைபிரியங்கா சோப்ரா சொல்லாமல்தவிர்த்துவிட்டார்.

Bollywood Priyanka chopra
இதையும் படியுங்கள்
Subscribe