/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/131_2.jpg)
நடிகர் சூர்யா நடிப்பில் கடைசியாக வெளியான படம் 'சூரரைப் போற்று'. கரோனா நெருக்கடி காரணமாக ஓடிடி தளத்தில் வெளியான இப்படத்திற்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்தது. இதனையடுத்து, இயக்குனர் பாண்டிராஜ் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகவுள்ள படத்தில் நடிகர் சூர்யா நடிக்க உள்ளார். இப்படத்தில் சூர்யாவிற்கு ஜோடியாக நடிகை பிரியங்கா மோகன் நடிக்க உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இவர், இயக்குனர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் உருவாகியுள்ள டாக்டர் படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடித்துள்ளார். இது குறித்தான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
முழுவீச்சில் நடைபெற்று வந்த இப்படத்தின் முதற்கட்ட பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டியநிலையில், படப்பிடிப்பை பிப்ரவரி மாதத்தில் தொடங்க படக்குழுத் திட்டமிட்டுள்ளதாகக் கூறுகின்றனர் நமக்கு நெருங்கிய சினிமா வட்டாரங்கள்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)