Advertisment

'ஜவான்' படத்தில் ஒரு பாடலுக்கு நடனமாடிய பிரபல நடிகை

 Priyamani shoots a special song with Shah Rukh Khan for Jawan

Advertisment

ஷாருக்கான் தற்போதுஅட்லீ இயக்கும் 'ஜவான்' படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் கதாநாயகியாக நயன்தாராவும் முக்கியக் கதாபாத்திரத்தில் தீபிகா படுகோனேவும் நடிக்கின்றனர். மேலும் விஜய் சேதுபதி வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்கிறார். ரெட் சில்லீஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். இப்படத்தின் பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது.

.

இந்நிலையில் 'ஜவான்' படத்தில் ப்ரியாமணி ஒரு பாடலுக்கு நடனமாடியுள்ளதாகத்தகவல் வெளியாகியுள்ளது. இப்பாடல் படத்தின் முக்கியப் பாடலாக இருக்கும் எனக் கூறப்படுகிறது. ஏற்கனவே ஷாருக்கான் நடிப்பில் வெளியான 'சென்னை எக்ஸ்பிரஸ்' படத்தில் ப்ரியாமணி ஒரு பாடலுக்கு நடனமாடியிருப்பார். அந்தப் பாடல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது. அந்த வகையில் இப்பாடலும் நல்ல வரவேற்பைப் பெரும் என்கிறது பாலிவுட் வட்டாரம்.

priyamani sharukh khan
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe