Skip to main content

'ஜவான்' படத்தில் ஒரு பாடலுக்கு நடனமாடிய பிரபல நடிகை

Published on 24/11/2022 | Edited on 24/11/2022

 

 Priyamani shoots a special song with Shah Rukh Khan for Jawan

 

ஷாருக்கான் தற்போது அட்லீ இயக்கும் 'ஜவான்' படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் கதாநாயகியாக நயன்தாராவும் முக்கியக் கதாபாத்திரத்தில் தீபிகா படுகோனேவும் நடிக்கின்றனர். மேலும் விஜய் சேதுபதி வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்கிறார். ரெட் சில்லீஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். இப்படத்தின் பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. 


.
இந்நிலையில் 'ஜவான்' படத்தில் ப்ரியாமணி ஒரு பாடலுக்கு நடனமாடியுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இப்பாடல் படத்தின் முக்கியப் பாடலாக இருக்கும் எனக் கூறப்படுகிறது. ஏற்கனவே ஷாருக்கான் நடிப்பில் வெளியான 'சென்னை எக்ஸ்பிரஸ்' படத்தில் ப்ரியாமணி ஒரு பாடலுக்கு நடனமாடியிருப்பார். அந்தப் பாடல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது. அந்த வகையில் இப்பாடலும் நல்ல வரவேற்பைப் பெரும் என்கிறது பாலிவுட் வட்டாரம்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“நீங்கள் தான் ஒரிஜினல்” - வைரல் வீடியோ குறித்து ஷாருக்கான் - மோகன்லால்

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
sharukhan mohan lal conversation about mohan lal viral dance video

கேரளா கொச்சியில் சமீபத்தில் நடந்த ஒரு விருது நிகழ்ச்சியில் மோகன்லால் கலந்து கொண்டார். அதில் அவர் ரஜினியின் ஜெயிலர் படத்திலிருந்து ‘ஹுக்கும்...’ பாடலுக்கும் ஷாருக்கானின் ஜவான் படத்திலிருந்து ‘ஜிந்தா பந்தா...’ பாடலுக்கும் மேடையில் நடனமாடினார். அது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலானது. மேலும் மோகன்லால் ரசிகர்களோடு இணைந்து ரஜினி ரசிகர்களும் ஷாருக்கான் ரசிகர்களும் அந்த வீடியோவை அதிகம் பகிர்ந்தனர். 

இந்த நிலையில் ஷாருக்கான் மோகன்லால் நடன வீடியோ குறித்து அவரது எக்ஸ் தளத்தில் பகிர்ந்திருந்தார். அந்தப் பதிவில், “இந்தப் பாடலை இப்போது எனக்கு மிகவும் சிறப்பானதாக மாற்றியதற்கு நன்றி மோகன்லால் சார். நீங்கள் ஆடியதில் சரிபாதி அளவு நன்றாக நடனமாடியிருப்பேன் என விரும்புகிறேன். லவ் யூ சார். உங்கள் வீட்டு டின்னருக்காக காத்திருக்கிறேன். நீங்கள் தான் ஒரிஜினல் ஜிந்தா பந்தா” எனக் குறிப்பிட்டிருந்தார். 

ஷாருக்கான் பதிவிற்கு தற்போது மோகன் லால் நன்றி தெரிவித்துள்ளார். தனது எக்ஸ் வலைத்தளத்தில் அவர் பகிர்ந்துள்ள பதிவில், “டியர் ஷாருக்கான். உங்களைப் போல் யாராலும் நடனமாட முடியாது.  உங்களது ஒப்பற்ற  உன்னதமான ஸ்டைலில் நீங்கள் தான் ஒரிஜினல் ஜிந்தா பந்தா. உங்கள் அன்பான வார்த்தைகளுக்கு நன்றி. வெறும் டின்னர் மட்டும் தானா? பிரேக் ஃபாஸ்ட் கூடாதா?” எனக் குறிப்பிட்டுள்ளார். 

அட்லீ இயக்கத்தில் ஷாருக்கான், நயன்தாரா, விஜய் சேதுபதி, தீபிகா படுகோனே உள்ளிட்ட பலர் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியாகி ரூ.1000 கோடிக்கு மேல் வசூலித்த படம் 'ஜவான்'. தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி என மூன்று மொழிகளில் வெளியான இப்படத்திற்கு அனிருத் இசையமைத்திருந்தார். இந்தப் படத்தின் பாடல்கள் அனைத்து நல்ல வரவேற்ப்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது. 

ஷாருக்கான் கடைசியாக ராஜ்குமார் ஹிரானி இயக்கத்தில் டங்கி படத்தில் நடித்திருந்தார். அடுத்த பட அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை. மோகன்லால், பிரித்விராஜ் இயக்கத்தில் ‘எல்.2 - எம்புரான்’ மற்றும் தருண் மூர்த்தி இயக்கத்தில் அவரது 360வது படத்தில் நடித்து வருகிறார்.   

Next Story

பீட்டா அமைப்புடன் கூட்டணி - கோயிலுக்கு பிரம்மாண்ட பரிசு வழங்கிய பிரியாமணி

Published on 18/03/2024 | Edited on 18/03/2024
Priyamani donate mechanical elephant to Kerala temple with peta

இந்தி, தெலுங்கு, மலையாளம் எனப் பல்வேறு மொழிகளில் பிஸியாகவுள்ளார் பிரியாமணி. கடந்த மாதம் இந்தியில் வெளியான ஆர்டிகிள் 370 படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இப்போது மைதான், கன்னடத்தில் கைமாரா மற்றும் தமிழில் கொட்டேஷன் கேங் உள்ளிட்ட படங்களை கைவசம் வைத்துள்ளார்.

Priyamani donate mechanical elephant to Kerala temple with peta

இந்த நிலையில், பீட்டா அமைப்புடன் இணைந்து இயந்திர யானையை கோவிலுக்குப் பரிசாக வழங்கியுள்ளார் பிரியாமணி. கோவில்களில் யானைகள் துன்புறுத்தப்படுவதை தடுக்கும் விதமாக இயந்திர யானைகளை கோவில்களில் இடம்பெறச் செய்யும் புதிய திட்டத்தை பீட்டா அமைப்பு முன்னெடுத்து வருகிறது. இந்த முன்னெடுப்பில் அவர்களுடன் கைகோர்த்த பிரியாமணி, கேரளா கொச்சி அருகே உள்ள திருக்கயில் மகாதேவா கோவிலுக்கு, இயந்திர யானையை பரிசாக வழங்கி மகிழ்ந்துள்ளார். இந்த கோயிலில் யானைகளை சொந்தமாக வைத்திருக்கவோ அல்லது வாடகைக்கு எடுக்கவோ கூடாது என்ற முடிவை பின்பற்றி வருகிறார்கள். இயந்திர யானைக்கு மகாதேவன் எனப் பெயரிடப்பட்டுள்ளது. கேரளாவில் அறிமுகப்படுத்தப்பட்ட இரண்டாவது இயந்திர யானை இதுவாகும்.

இது குறித்துப் பேசிய அவர், “தொழில்நுட்பத்தின் முன்னேற்றம் என்பது விலங்குகளுக்கு தீங்கு விளைவிக்காமல் இருப்பதை உறுதி செய்வதன் மூலம் நமது வளமான கலாச்சார நடைமுறைகளையும் பாரம்பரியத்தையும் பராமரிக்க முடியும்” என்றுள்ளார்.