/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/174_5.jpg)
கண்களால் கைது செய் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான நடிகை பிரியாமணி அதன் பிறகு நடித்த 'பருத்திவீரன்' படத்திற்காக தேசிய விருதுபெற்றார். இதையடுத்து தெலுங்கு, கன்னட, தமிழ் என பல படங்களில் பிஸியாகநடித்து வந்தபிரியாமணி கடந்த 2017 ஆம் ஆண்டு முஸ்தபா ராஜ் என்பவரைதிருமணம் செய்து கொண்டார். அதன் பிறகும்சில படங்கள் மற்றும் வெப் தொடர்களில் நடித்து வருகிறார்.
இந்நிலையில் தனது, நிறம் உடல் குறித்து சமூக வலைதளங்களில் பலர் விமர்சனம் செய்து வருவதாக பிரியாமணி கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் அளித்த சமீபத்திய பேட்டியில், "சமூக வலைதளங்களில் எனதுநிறம் குறித்து பலரும் விமர்சனம் செய்து வருகின்றனர். இங்கு 99 சதவிகிதம் பேர் நல்ல விதமாக பேசுகிறார்கள், ஆனால்மீதம் உள்ள ஒரு சதவிகிதம் பேர் எனது உடல் எடைகுறித்தும், நான் கருப்பாக இருக்கிறேன் என்றும், விமர்சித்து வருகின்றனர். ஒரு பிரபலமாக இருக்கும் பட்சத்தில் நீங்கள் எது செய்தலும் உங்களை அனைவரும் கவனிப்பார்கள். சினிமா துறையில் நீங்கள் எல்லா நேரங்களிலும் சரியானவர்களாக இருக்க வேண்டும். ஆனால் அது ரொம்ப கஷ்டம். ஒரே ஒரு நாள் நான் நானாக இருக்க ஆசைப்படுகிறேன். விரும்பியதை சாப்பிட வேண்டும், நான் அழகாக இருக்க விரும்பவில்லை" எனத்தெரிவித்துள்ளார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)