Advertisment

பாகுபலி இயக்குனர் படத்தில் பிரியாமணி!!!

priyamani

Advertisment

‘பாகுபலி 2’ வை தொடர்ந்து இயக்குனர் ராஜமௌலி அடுத்து என்ன படம் இயக்க போகிறார் என்ற எதிர்பார்பு ரசிகர்களிடம் அதிகளவில் இருந்தது. ஆனால் அவரும் அவ்வளவு பெரிய வெற்றிக்கு பின் ஒன்றரை வருடம் கழித்து தற்போதுதான் படம் எடுக்கிறார்.

இந்த படத்திற்கு ‘ஆர்ஆர்ஆர்’ என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. தெலுங்கு பிரபலங்களான ஜூனியர் என்.டி.ஆர் மற்றும் ராம் சரண் ஆகியோர் இத்திரைப்படத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர். கடந்த வாரம் இந்த படத்தின் ஷூட்டிங்கும் ஹைதராபாத்தில் தொடங்கப்பட்டுள்ளது. சுமார் 300 கோடி பட்ஜெட்டில் இந்த படம் எடுக்கப்படுவதாக சொல்லபப்டுகிறது.

இந்நிலையில், தமிழ் படமான பருத்திவீரனில் கதாநாயகியாக நடித்ததற்கு நேஷனல் அவார்ட் வாங்கியவரான பிரியாமணி கடந்த சில வருடங்களாகவே அவுட்டாப் ஃபார்பில் இருக்கிறார். ‘சாருலதா’ என்ற படத்திற்கு பின் தமிழில் வேறு எந்த படவாய்ப்பும் இன்றி இருக்கிறார். தற்போது இவருக்கு ஜாக்பாட் அடித்துள்ளது. பிரியாமணி ஆர்ஆர்ஆர் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளாதாக கூறப்படுகிறது.

junior ntr
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe