Advertisment

ஜோதிகா, சமந்தாவை அடுத்து பிரியாமணி....

priyamani

Advertisment

கண்களால் கைது செய் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான நடிகை பிரியாமணி அதன் பிறகு நடித்த 'பருத்திவீரன்' படத்திற்காக தேசிய விருதுபெற்றார். இதையடுத்து தெலுங்கு, கன்னட படங்களில் பிஸியான அவர் கடந்த ஆண்டு திருமணம் செய்துகொண்டார். இருப்பினும் திருமணத்திற்கு பிறகும் தொடர்ந்து தெலுங்கு, கன்னடம், ஹிந்தி படங்களில் வெற்றிகரமாக நடிகையாக வலம் வரும் இவர் ஜோதிகா, சமந்தா போல் திருமணத்திற்கு பிறகும் கூட கதாநாயகியாக நடிப்பது பற்றி பேசியபோது... "திருமணத்திற்கு பிறகும் நடிகைகள் நாயகியாக நடிப்பது ஆரோக்கியமான ஒன்று. ஒரு நடிகைக்கு திருமணம் ஆகிவிட்டாலே அவர்கள் அக்கா, அண்ணி வேடங்களுக்கு தான் என்று ஒதுக்கி வைத்ததை நானே பார்த்திருக்கிறேன். ஆனால் இப்போது அது மாறி இருக்கிறது. இது தொடர வேண்டும்" என்றார்.

tamilcinemaupadates priyamani
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe