Advertisment

பிரபல இயக்குநருடன் மீண்டும் கைகோர்க்கும் அக்‌ஷய் குமார்!

Akshay Kumar

இயக்குநர் ப்ரியதர்ஷன் இயக்கத்தில் இந்தியில் உருவாகியுள்ள 'ஹங்கமா 2' திரைப்படம் விரைவில் ஓடிடி தளத்தில் நேரடியாக வெளியாகவுள்ளது. அவர் இயக்கத்தில் மலையாளத்தில் உருவாகியுள்ள மரக்காயர் திரைப்படம் வரும் ஆகஸ்ட் 15ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இவ்விரு படங்களுக்கான மொத்த பணிகளையும் நிறைவு செய்துள்ள ப்ரியதர்ஷன், தற்போது அடுத்த படத்திற்கான கதை உருவாக்கும் பணிகளில் கவனம் செலுத்திவருகிறார்.

Advertisment

இந்த நிலையில், ப்ரியதர்ஷன் அடுத்தாக இயக்கும் படத்தில் நடிகர் அக்‌ஷய் குமார் நாயகனாக நடிக்கவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. நடிகர் அக்‌ஷய் குமாரை 'ரக்‌ஷா பந்தன்' படப்பிடிப்புத் தளத்தில் சந்தித்து இப்படம் குறித்து இயக்குநர் ப்ரியதர்ஷன் விவாதித்துள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு அடுத்த ஆண்டின் தொடக்கத்தில் துவங்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது.

Advertisment

அக்‌ஷய் குமார் - ப்ரியதர்ஷன் கூட்டணியில் உருவான 'கரம் மசாலா', 'பூல் ஃபூலையா', 'ஹீரா ஃபெர்ரி', 'பாஹம் பாக்', 'தி தனா தான்', 'கட்டா மிட்டா' ஆகிய படங்களுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது குறிப்பிடத்தக்கது.

akshay kumar
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe