'ஒரு அடார் லவ்' படத்தில் கண் சிமிட்டல் மூலம் நாடு முழுவதும் பிரபலமானவர் நடிகை பிரியா வாரியர். இவர் நடிப்பில் வெளியான இப்படம் எதிர்பார்த்த அளவு ஓடவில்லை. படத்தில் நடித்த சக நடிகை நூரின் ஷெரீப்பிற்கு முன்னுரிமை அளித்து படத்தை உருவாக்க திட்டமிட்டுருந்ததாகவும், பிரியா வாரியர் கண்சிமிட்டல் வைரலானதும் அவருக்கு முக்கியத்துவம் அளிக்கும்படி தயாரிப்பாளர் வற்புறுத்தியதால் பிரியாவாரியரை முதன்மையான கதாபாத்திரமாக்கியதாகவும் பட இயக்குனர் ஓமர் லூலு சமீபத்தில் அறிவித்தார்.

oal

Advertisment

இதையடுத்து நடிகை நூரின் ஷெரீப், தனக்கு முதன்மை கதாபாத்திரம் என்று சொல்லி பின்னர் பிரியா வாரியருக்கு முக்கியத்துவம் கொடுத்து என்னை ஓரம் கட்டி துணை நடிகையாக்கிவிட்டனர் என வருத்தம் தெரிவித்திருந்தார். இந்நிலையில் இந்த சம்பவம் காரணாமாக பிரியா வாரியருக்கும், நூரின் ஷெரீப்புக்கும் மோதல் ஏற்பட்டு உள்ளது.

Advertisment

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="9350773771"

data-ad-format="auto"

data-full-width-responsive="true">

மேலும் நூரின் ஷெரீப்புக்கு பதிலடி அளிக்கும் வகையில் பிரியா வாரியர் பேசியபோது.... "கதையை எனக்காக மாற்றியதாக குற்றம்சாட்டுகின்றனர். கண்சிமிட்டல் பாடலுக்கு பிறகு எனக்கு முக்கியத்துவம் அளிப்பதுபோல் கதையை மாற்றியதாக கூறப்படுவதில் உண்மை இல்லை. படத்தில் தனக்கு முக்கியத்துவம் இல்லாமல் செய்துவிட்டதாக நூரின் ஷெரீப் குறை கூறி உள்ளார். அவரை படத்தில் ஓரம்கட்டவில்லை. முதலில் சொன்ன கதையைத் தான் அப்படியே படமாக்கி இருந்தனர்"என்றார் காட்டமாக.