"நான் மட்டும் ஏன் இதைச் செய்தேன் என்ற கேள்வி உங்களுக்கு எழலாம்'' - ப்ரியா வாரியர் விளக்கம்!

vsv

'ஒரு அடார் லவ்' படத்தில் இடம் பெற்ற பாடல் காட்சியில் கண் சிமிட்டல் மூலம் இந்தியா முழுவதும் பிரபலமான நடிகை ப்ரியா பிரகாஷ் வாரியர் கடந்த சில தினங்களுக்கு முன்பு இன்ஸ்டாகிராம் சமூக வலைத்தளத்திலிருந்து வெளியேறினார். இவரை இன்ஸ்டாகிராமில் பெரிய நடிகைகளுக்கு இணையாக 70 லட்சதிற்கு மேற்பட்டோர் பின்தொடர்ந்து வந்த நிலையில் இரண்டு வாரங்களுக்குப் பிறகு மீண்டும் இன்ஸ்டாகிராமிற்குள் வந்த ப்ரியா பிரகாஷ் வாரியர் இன்ஸ்டாகிராம் தளத்திலிருந்து தான் வெளியேறியதற்கான காரணம் குறித்து பேசியுள்ளார். அதில்...

''ஊரடங்கு காலத்தில் அனைவரும் இணையத்திலேயே இருக்கும்போது நான் மட்டும் ஏன் சமூக வலைத்தளத்திலிருந்து விலகினேன் என்ற கேள்வி உங்களுக்கு எழலாம். இதற்குப் பின்னால் பெரிய காரணங்கள் ஒன்றும் இல்லை. என்னை பொறுத்தவரை மற்ற விஷயங்களை விட என் மன அமைதி மட்டுமே எனக்கு முக்கியம். நான் எந்த காரணத்துக்காக செய்தேன் என்பது முக்கியமில்லை. ஆனால் கடந்த இரண்டு வாரங்களாக நான் மன அமைதியுடன் இருந்தேன். ஆனால் இது எனக்கு தொழில்ரீதியான தளம் என்பதால் என்னால் நீண்டநாள் இதிலிருந்து விலகியிருக்கமுடியாது. இரண்டு வாரங்களே விலகியிருந்தாலும் உண்மையில் நான் மிகவும் மகிழ்ச்சியாக இருந்தேன். எந்தக் காலத்திலும் சமூக வலைத்தளங்கள் என் மனதைக் காயப்படுத்திவிடக் கூடாது என்று நினைப்பேன்.

ஆனால் சமீபகாலமாக அது என் மனதில் தாக்கத்தை ஏற்படுத்தத் தொடங்கியது. எனவே ஒரு சிறிய இடைவேளை எடுத்துக் கொள்ள முடிவு செய்தேன். ஆனால் இதற்குப் பலரும் பல காரணங்களைக் கூறிவந்ததைப் பார்க்கமுடிந்தது. இதை ஏன் ஒரு பெரிய பிரச்சனையாக மாற்றுகிறார்கள் என்று எனக்குத் தெரியவில்லை. இது என்னுடைய தனிப்பட்ட விஷயம். நான் கேலி செய்யப்படுவது ஒன்றும் புதிதல்ல. தினமும் என்னைப் பற்றியஏதாவது ஒரு கேலியைப் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறேன். எனவே இன்ஸ்டாவிலிருந்து விலகியதற்கு அது காரணமல்ல. மீண்டும் இன்ஸ்டாவிலிருந்து விலகமாட்டேன் என்று சொல்லமுடியாது. தேவைப்பட்டால் மீண்டும் நிச்சயமாக விலகுவேன்'' என விளக்கம் அளித்துள்ளார்.

priya variyar Priya Warrier
இதையும் படியுங்கள்
Subscribe