

style="display:inline-block;width:336px;height:280px" data-ad-client="ca-pub-7711075860389618" data-ad-slot="3041061810">
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
மேயாதமான், கடைக்குட்டி சிங்கம், ஆகிய படங்களில் நடித்து பிரபலமான நடிகை பிரியா பவானி சங்கர் ரஜினி, கமலின் அரசியல் பயணம் பேசியபோது... "நாம் எப்போதுமே நடிகர்களிடமிருந்து சில விஷயங்களை எதிர்பார்க்கிறோம். அவர்கள் திரையில் பேசும் வசனங்களை அவர்களுடைய நிஜ வாழ்க்கையோடு ஒப்பிடுகிறோம். எல்லோருக்குமே அரசியலில் தொடர்பு இருக்கிறது. ரஜினி, கமல் இருவரையுமே எனக்கு ரொம்ப பிடிக்கும். அவர்கள் அரசியலில் குதித்திருக்கிறார்கள். அவர்கள் மிகப்பெரிய நடிகர்கள் என்பதால் நம்ப வேண்டும் என்ற அவசியமில்லை. அரசியல் ஒன்றும் இரண்டரை மணி நேர படம் கிடையாது, அவர்கள் தேர்தலில் ஜெயித்து வெற்றிபெற்று ஐந்து ஆண்டுகள் ஆட்சி செய்யப்போகிறார்கள். இந்த விஷயத்தில் நான் ஒரு சாதாரண குடிமகளாக முடிவெடுப்பேன். ஆனால் அவர்களுடைய படம் வெளியானால் நான் முதல் நாள் முதல் காட்சி பார்ப்பேன். அதற்கும் அரசியலுக்கும் சம்பந்தம் இல்லை" என்றார்.
style="display:inline-block;" data-ad-client="ca-pub-7711075860389618" data-ad-slot="9546799378">
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/member_avatars/sites/default/files/pictures/2018-02/25520166_1989059468016271_1652769857_n.jpg)