priya bhavani shankar to play heroine in vishal 34

ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கும் 'மார்க் ஆண்டனி' படத்தில் நடித்துள்ள விஷால், அதன் ரிலீஸுக்கு காத்திருக்கிறார். இப்படம் ஜூலை 28ஆம் தேதி வெளியாகவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனையடுத்து ஹரி இயக்கத்தில் நடிக்கவுள்ளார் விஷால். இப்படத்தை கார்த்திக் சுப்புராஜின் 'ஸ்டோன் பென்ச்' நிறுவனமும் ஜீ ஸ்டாடியோஸ் நிறுவனமும் இணைந்து தயாரிக்கின்றன. விஷாலின் 34வது படமாக உருவாகும் இப்படத்தின் பூஜை கடந்த மாதம் போடப்பட்ட நிலையில் ஆரம்பக்கட்ட பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன.

Advertisment

இந்நிலையில் இப்படத்தின் கதாநாயகி குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி பிரியா பவானி ஷங்கர் நடிக்க கமிட்டாகியுள்ளதாக கூறப்படுகிறது. படப்பிடிப்பு அடுத்த மாதம் தொடங்கவுள்ளதாக பேசப்படுகிறது. இத்தகவல் உறுதியாகும் பட்சத்தில் முதல் முறையாக விஷாலுடன் ஜோடி போடவுள்ளார் பிரியா பவானி ஷங்கர். மேலும் ஹரி இயக்கத்தில் இரண்டாவது முறையாக நடிக்கவுள்ளார். முன்னதாக ஹரி இயக்கத்தில் அருண்விஜய் நடிப்பில் வெளியான 'யானை' படத்தில் நடித்திருந்தார்.

Advertisment

இப்போது அஜய் ஞானமுத்து - அருள்நிதி கூட்டணியில்உருவாகும் 'டிமான்டி காலனி 2', ஷங்கர் - கமல் கூட்டணியில் வெளியாகும் 'இந்தியன் 2' உள்ளிட்ட சில படங்களை கைவசம் வைத்துள்ளார்.