/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/43_22.jpg)
விஷால் நடிப்பில் கடைசியாக வெளியான சக்ரா திரைப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றது. அப்படத்தைத் தொடர்ந்து, ஆனந்த் சங்கர் இயக்கத்தில் உருவாகிவரும் எனிமி திரைப்படத்தில் விஷால் நடித்துவருகிறார். இப்படத்தில், வில்லனாக ஆர்யா நடிக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு முழுவீச்சில் நடைபெற்று வரும் நிலையில், விஷால் நடிக்கும் அடுத்த படம் குறித்து புதிய தகவல் வெளியாகியுள்ளது.
அதன்படி, எனிமி படத்தைத் தொடர்ந்து, ஜெயம் ரவியை வைத்து அடங்கமறு திரைப்படத்தை இயக்கிய கார்த்திக் தங்கவேலு இயக்கும் படத்தில் விஷால் நடிக்கவுள்ளதாகவும், அப்படத்தில் விஷாலுக்கு ஜோடியாக பிரியா பவானி ஷங்கர் நடிக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது. இப்படத்தை பிரபல தயாரிப்பாளர் பைவ் ஸ்டார் கதிரேசன் தயாரிக்கவுள்ளார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)