Priya Bhavani Shankar

Advertisment

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரானஜெயம் ரவி, தற்போது மணிரத்னம் இயக்கத்தில் உருவாகிவரும் ‘பொன்னியின் செல்வன்’, அகமத் இயக்கத்தில் உருவாகிவரும் ‘ஜன கன மன’ ஆகிய படங்களில் நடித்துவருகிறார். இவ்விரு படங்களைத் தொடர்ந்து கல்யாண கிருஷ்ணன் இயக்கத்தில் உருவாகும் படத்தில் ஜெயம் ரவி நடிக்கவுள்ளார். இவர், ஜெயம் ரவி நடிப்பில் கடந்த 2015ஆம் ஆண்டு வெளியான ‘பூலோகம்’ படத்தை இயக்கியவர் ஆவார். இப்படத்திற்கு தற்காலிகமாக 'ஜெயம் ரவி 28' எனப் பெயரிடப்பட்டுள்ளது.

இந்த நிலையில், கல்யாண கிருஷ்ணன் - ஜெயம் ரவி இணையும் படம் குறித்து புதிய தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, 'ஜெயம் ரவி 28' படத்தில் ஜெயம் ரவிக்கு ஜோடியாக நடிகை பிரியா பவானி சங்கர் நடிக்கவுள்ளதாகக் கூறப்படுகிறது. தற்போது இப்படத்திற்கான முதற்கட்ட பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், படத்தின் படப்பிடிப்பை அடுத்த மாதத்தின் மத்தியில் தொடங்க படக்குழு திட்டமிட்டுள்ளது.