Advertisment

லாரன்ஸுடன் ஜோடி சேரும் பிரியா பவானி சங்கர்!

Priya Bhavani Shankar

Advertisment

நடிகர் லாரன்ஸ் நடிப்பில் கடைசியாக வெளியான படம் 'காஞ்சனா 3'. அப்படத்தைத் தொடர்ந்து, அவர் நடிக்க இருக்கும் படம் குறித்த அப்டேட் கடந்த அக்டோபர் மாதம் வெளியானது. ஃபைவ் ஸ்டார் கதிரேசன் தயாரிக்கும் இப்படத்திற்கு, 'ருத்ரன்' எனப் பெயரிடப்பட்டுள்ளது. இப்படத்தில் இசையமைப்பாளராக ஜி.வி.பிரகாஷ் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

படம் குறித்த அப்டேட் வெளியான போது படத்தின் இயக்குனர் யார் என்பதில் ரகசியம் காக்கப்பட்டது. இப்படத்தினை ஃபைவ் ஸ்டார் கதிரேசனே இயக்கவுள்ளார் என்று உறுதிப்படுத்தப்படாத தகவல் ஒன்று உலவிவருகிறது.

இந்த நிலையில், 'ருத்ரன்' படத்தில் நடிகை பிரியா பவானி சங்கர் நடிக்க உள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. பிரியா பவானி சங்கர் இன்று தனது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார். அதனைமுன்னிட்டு, இந்த அப்டேட்டை படக்குழு வெளியிட்டுள்ளது.

Advertisment

actor raghava lawrence priya bhavani shankar
இதையும் படியுங்கள்
Subscribe