Priya Bhavani Shankar

Advertisment

நடிகர் சூர்யாவை நாயகனாக வைத்து இயக்கத் திட்டமிட்ட 'அருவா' படம் கைவிடப்பட்டதை அடுத்து, நடிகர் அருண் விஜய்யுடன் கைக்கோர்த்துள்ளார் இயக்குநர் ஹரி. ட்ரம்ஸ்டிக்ஸ் புரொடக்‌ஷன்ஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு தற்காலிகமாக 'அருண் விஜய் 33' எனப் பெயரிடப்பட்டுள்ளது. படத்தின் முதற்கட்ட பணிகள் முழுவீச்சில் நடைபெற்றுவரும் நிலையில், தற்போது படத்தின் கதாநாயகி குறித்த அப்டேட்டை தயாரிப்பு தரப்பு வெளியிட்டுள்ளது.

alt="kalathil santhipom" data-align="center" data-entity-type="file" data-entity-uuid="16a80114-eab3-40c4-935e-0f21d1251ef1" src="https://www.nakkheeran.in/sites/default/files/inline-images/kalathil-santhipom-500x300-article-inside.jpg" />

அதன்படி, இப்படத்தில் அருண் விஜய்க்கு ஜோடியாக நடிகை பிரியா பவானி சங்கர் நடிக்க உள்ளார். முதற்கட்ட பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளதையடுத்து, அடுத்த மாதத்தில் படப்பிடிப்பைத் தொடங்க படக்குழுத் திட்டமிட்டுள்ளதாகக் கூறுகின்றனர், நமக்கு நெருங்கிய சினிமா வட்டாரங்கள்.

Advertisment

நடிகர் அருண்விஜய் மற்றும் பிரியா பவானி சங்கர் இருவரும் இணைந்து ‘மாஃபியா’ படத்தில் நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.