Priya Bhavani Shankar

Advertisment

ஹரி இயக்கத்தில் அருண் விஜய், பிரியா பவானி சங்கர், பிரகாஷ் ராஜ், ராதிகா உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள 'யானை' திரைப்படம் விரைவில்திரையரங்குகளில் வெளியாகவுள்ள நிலையில், படத்தின் நாயகி பிரியா பவானி சங்கரை நக்கீரன் ஸ்டூடியோ சார்பில் சந்தித்தோம். அந்தச் சந்திப்பில் யானை படம் குறித்து அவர் பகிர்ந்து கொண்டவை பின்வருமாறு...

"இந்தப் படத்தில் ஜெபமலர் என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளேன். நான் இந்தக் கேரக்டர் பண்ணினால் எப்படி இருக்கும் என்று டிஸ்கஷன் வந்தபோது நான் வேண்டாம் என ஹரி சார் ரிஜக்ட் பண்ணியிருக்கிறார். அதன் பிறகு ஒருநாள் அவரை ஏர்போர்ட்டில் சந்தித்தேன். அடுத்து ஒரு வாரம் கழித்து எனக்கு கதை சொன்னார். இந்த விஷயம் எனக்குத் தெரியாது. ஹரி சார் ஆடியோ லான்ஞ்சில் சொல்லித்தான் எனக்கு தெரியும்.

ரொம்ப ஸ்ட்ரிக்ட், அடிக்கடி கோபப்படுவார் என ஹரி சாரை பற்றி எல்லோருமே பயமுறுத்தும் வகையில்தான் சொன்னார்கள். கதை சொல்லி முடித்தவுடனேயே, என்னோட ஷூட்டிங் இப்படித்தான் இருக்கும், நான் டென்சனாவேன், கத்துவேன். அதுவெல்லாம் உங்களைப் பார்த்து கத்துறேன்னு நினைச்சுக்காதிங்கனு ஹரி சார் சொன்னார். அதுவெல்லாம் இல்லாவிட்டால் இவ்வளவு பெரிய படத்தை நினைத்தது மாதிரி எடுக்க முடியாதுனு நினைக்கிறேன்.

Advertisment

யானைதான் பெரிய பட்ஜெட்டில் ரிலீஸாகும் என்னுடைய முதல் கமர்ஷியல் படம். அருண் விஜய்யோடு இணைந்து ஏற்கனவே நான் நடித்திருந்தாலும், இந்தப் படம் முற்றிலும் வேறாக இருந்தது. மற்ற படங்களைவிட இந்தப் படத்திற்கு அதிக அளவு உழைப்பை அவர் கொடுத்திருக்கிறார். ராதிகா மேம் ரொம்பவும் ஜாலியான ஆள். அவருடன் நிறைய நேரம் செலவழிக்க வாய்ப்பு கிடைத்தது. ஆரம்பக்காலத்தில் அவர் பட்ட அவமானங்கள் குறித்து ரொம்பவும் நகைச்சுவையாகச் சொன்னார். அவ்வளவு பெரிய உயரத்தில் இருக்கும் ஒருவர், அதை மற்றவர்களுடன் பகிர்ந்துகொள்வதெல்லாம் பெரிய விஷயம்".