Advertisment

காதலனோடு இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்து புது செய்தியை வெளியிட்ட பிரியா பவானி ஷங்கர்

priya bhavani shankar enter new house with his lover

சின்னத்திரையில் இருந்து 'மேயாத மான்' படத்தின் மூலம் வெள்ளித்திரைக்கு அறிமுகமான பிரியா பவானி ஷங்கர்கடைசியாக 'தனுஷ் நடிப்பில் வெளியான 'திருச்சிற்றம்பலம்' படத்தில் நடித்திருந்தார். இதனைத்தொடர்ந்து தற்போது ஜெயம் ரவியின் 'அகிலன்', சிம்புவின் 'பத்து தல', ராகவா லாரன்ஸின், 'ருத்ரன்', கமலின் 'இந்தியன் 2' உள்ளிட்ட சில படங்களில் நடித்து வருகிறார். இதனிடையே ஹரிஷ் கல்யானுடன் கிசுகிசுக்கப்பட்டார். கடந்த அக்டோபர் மாதம் ஹரிஷ் கல்யானுக்கும் நர்மதா உதயகுமார் என்கிற பெண்ணுக்கும் திருமணம் நடந்தது.

Advertisment

இந்நிலையில் பிரியா பவானி ஷங்கர்தனது காதலனுடன் புதிய வீட்டிற்கு குடியேறியுள்ளதாகத்தெரிவித்துள்ளார். இது தொடர்பான புகைப்படங்களைத்தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

Advertisment

மேலும் அந்தப் பதிவில், "18 வருடங்களாகக் கடற்கரை பக்கத்தில் பார்த்து ரசித்த ஒரு இடத்தில் புது வீடு கட்டி இருக்கிறோம். இனி அங்கே இருந்து நிலவையும் கடலையும் ரசிக்கப் போகிறோம்" எனக் குறிப்பிட்டுள்ளார். இப்புகைப்படம் தற்போது பலரது கவனத்தை ஈர்த்துள்ளது. இதனைத்தொடர்ந்து திரை பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் பலரும் பிரியா பவானி ஷங்கருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

priya bhavani shankar
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe