"ஆரம்பத்தில் எதிர்வினையாற்ற விரும்பவில்லை" - வடிவேலு வசனத்துடன் பிரியா பவானி ஷங்கர் விளக்கம்

priya bhavani shankar clarified about his recent news

சின்னத்திரையிலிருந்து 'மேயாத மான்' படத்தின் மூலம் வெள்ளித்திரைக்கு அறிமுகமான பிரியா பவானி ஷங்கர்கடைசியாக தனுஷ் நடிப்பில் வெளியான 'திருச்சிற்றம்பலம்' படத்தில் நடித்திருந்தார். இதனைத்தொடர்ந்து தற்போது ஜெயம் ரவியின் 'அகிலன்', சிம்புவின் 'பத்து தல', ராகவா லாரன்ஸின், 'ருத்ரன்', கமலின் 'இந்தியன் 2' உள்ளிட்ட சில படங்களில் நடிக்கிறார்.

சமூக வலைதளத்தில் கடந்த சில நாட்களாக பிரியா பவானி ஷங்கர் ஒரு பேட்டியில் பேசியுள்ளதாக சில செய்திகள் வெளியானது. அதில், "எதார்த்தமான வாழ்க்கையை பிரதிபலிக்கும் படங்கள் மிகவும் பிடிக்கும். படங்களில் நடித்தால் பணம் வருகிறது. அதனால் நடிக்கிறேன்.சினிமா பின்னணி உள்ள குடும்பத்திலிருந்து வந்தவர்களே திரையுலகில் தங்களை நிரூபித்துக்கொள்ள நிறைய கஷ்டப்பட்டுக்கொண்டு இருக்கும் நிலையில் நான் இன்னும் அதிகமாக உழைக்க வேண்டும் என்று நினைக்கிறேன்" என பிரியா பேசியுள்ளதாக சொல்லப்பட்டது.

இந்த செய்தி சமூக வலைதளத்தில் வைரலாக பரவ, இது குறித்துநடிகை பிரியா பவானி ஷங்கர் தற்போது விளக்கமளித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், "மாப்ள சொம்பு கொடுத்தாதான் தாலிகட்டுவாராம் அப்படிங்கிற மாதிரி இருக்கிறது. ஆரம்பத்தில் நான் எதிர்வினையாற்ற விரும்பவில்லை. மரியாதைக்குரிய சில நிறுவனங்கள் கூட நம்பகத் தன்மையைப் பற்றி கவலைப்படாமல் காரசாரமாக செய்தியை கொடுக்க வேண்டும் என்ற நோக்கில் இது போல் செய்கின்றன.

முதலில் நான் பேசியதாக அவர்கள் குறிப்பிட்டது துளியளவும் உண்மையில்லை. அதை நான் சொல்லவே இல்லை. அப்படியே அதை சொல்லியிருந்தாலும் அதில் என்ன பெரிய விஷயம்என்று புரியவில்லை. ஆம் நான் பணத்திற்காக வேலை செய்கிறேன். எல்லோரும் பணத்திற்காகத்தான் வேலை செய்கிறார்கள். ஒரு நடிகரிடம் இருந்து வரும்போது மட்டும் ஏன் இவ்வளவு மலிவாகமற்றும் இழிவாக பார்க்கப்படுகிறது. நான் என் வழியில் முன்னேறிவிட்டேன், யாரையும் எளிதாகவும் மலிவாகவும் நினைக்கமாட்டேன்" எனக் கூறியுள்ளார்.

priya bhavani shankar
இதையும் படியுங்கள்
Subscribe