Priya Bhavani shankar - Bommai Press meet

பொம்மை படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் இயக்குநர் ராதாமோகன், எஸ்.ஜே. சூர்யா மற்றும் நடிகைகள் சாந்தினி மற்றும் பிரியா பவானி சங்கர் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

Advertisment

நிகழ்வில் கலந்துகொண்ட பிரியா பவானி சங்கர் பேசியதாவது, “நான் மிகவும் எதிர்பார்க்கும் ஒரு படம் பொம்மை. இது முழுக்க முழுக்க ராதாமோகன் சாருடைய படம். ஒவ்வொரு காட்சிக்கும் அவர் கொடுக்கும் உயிர் அழகானது. அவ்வளவு க்யூட்டாக நடித்துக் காட்டுவார்.

Advertisment

எஸ்.ஜே. சூர்யா சார் ஒரே நேரத்தில் பரபரப்பாகவும் இருப்பார், கூலாகவும் நடிப்பார். அவர் நடிப்பதைப் பார்ப்பதே நல்ல ஒரு அனுபவம். 20, 30 டேக்குகள் சென்றாலும் முதல் டேக்கில் இருந்த அதே எனர்ஜி அவரிடம் இருக்கும். ஒவ்வொரு முறையும் புதிதாக ஒன்றைச் செய்வார். அவரோடுஇந்தப் படம் முழுக்க நான் பயணிப்பேன். மதன் கார்க்கியின் பாடல் வரிகள் அருமையாக இருந்தன. அசிஸ்டன்ட் டைரக்டர்கள் அனைவருக்கும் என்னுடைய நன்றி. என்னுடைய மேக்கப் டீமுக்கு நன்றி” என்றார்.