priya bhavani shankar to act in arulnithi's 'demonte colony 2'

அஜய் ஞானமுத்து இயக்கத்தில் அருள் நிதி நடிப்பில் 2015-ஆம் ஆண்டு வெளியாகி சூப்பர் ஹிட்டான படம் 'டிமான்ட்டி காலனி'. இப்படத்தின் இரண்டாம் பாகம் உருவாகிறது என சமீபத்தில் படக்குழு அறிவித்திருந்தது. அதன் படி 'டிமான்ட்டி காலனி 2' படத்தை அஜய் ஞானமுத்து கதை, திரைக்கதை, வசனம் எழுதி தயாரிக்க வெங்கி வேணுகோபால் இயக்குகிறார். அருள் நிதி முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு இம்மாதம் இறுதிக்குள் தொடங்கும் எனப் படக்குழு தெரிவித்திருந்தது.

Advertisment

இந்நிலையில் 'டிமான்ட்டி காலனி 2' படத்தின் கதாநாயகி பற்றிய தகவல் வெளியாகியுள்ளது. அதன் படி இப்படத்தில் பிரியா பவானி ஷங்கர் கதாநாயகியாக நடிக்கவுள்ளார் எனக் கூறப்படுகிறது. ஏற்கனவே அருள்நிதிக்கு ஜோடியாக 'களத்தில் சந்திப்போம்' படத்தில் பிரியா பவானி ஷங்கர் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisment