/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/49_10.jpg)
தமிழ் இலக்கிய பேராளுமை, கரிசல் மண் எழுத்துக்கு சொந்தக்காரர் சாகித்ய அகாடமி விருதுபெற்ற எழுத்தாளர், கி.ரா என்று அன்பாக அழைக்கப்படும் கி. ராஜநாராயணன் அவர்கள் நேற்று (17.05.2021) இரவு காலமானார். அவருக்கு வயது 99. ‘கோபல்ல கிராமம்’, ‘கோபல்ல கிராமத்து மக்கள்’, ‘கரிசல்காட்டு கடுதாசி’, ‘வட்டார வழக்கு சொல்லகராதி’ போன்ற காலத்தால் அழியாத படைப்புகளைத் தந்த கி. ராஜநாராயணன், அண்மைக்காலமாக முதுமை நோய்க்கான சிகிச்சை எடுத்துவந்தார். கி.ராவின் மறைவையடுத்து, இலக்கிய வாசகர்கள், திரைத்துறை பிரபலங்கள், அரசியல் பிரமுகர்கள் எனப் பலரும் இரங்கல் தெரிவித்துவருகின்றனர். அந்த வகையில், நடிகை பிரியா பவானி சங்கரும் கி.ராவின் மறைவிற்கு இரங்கல் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில், "தமிழில் பேசினால் அபராதம் விதிக்கக்கூடிய பள்ளியில் 14 ஆண்டுகள் பயின்றேன். அப்படி ஒரு வாழ்க்கை முறையில் தனியார் நூலகர் ஒருவரின் பரிந்துரையில் 'கோபல்ல கிராமம்' மூலம் எனக்கு அறிமுகமானவர்தான் கி.ரா. அதன் பிறகு,'வயது வந்தவர்களுக்கு மட்டும்' மூலம் இன்னும் பரிட்சயமானார். அவருடைய சிறுகதைகள் நான் வாழாத உலகத்தை என் மனதில் பதியவைத்தன. எழுத்தாளர்கள் என்றுமே மறைவதில்லை. இப்போதும் என்னை புன்னகைக்கவைக்கிறார். நிறைவான வாழ்க்கை" எனக் குறிப்பிட்டுள்ளார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)