அர்ஜுன் ரெட்டி தெலுங்கு படத்தின் தமிழ் ரீமேக்காக உருவாகும் 'ஆதித்ய வர்மா' படத்தில் சியான் விக்ரமின் மகன் துருவ் விக்ரம் கதாநாயகனாக நடிக்கிறார். அர்ஜுன் ரெட்டி படத்தின் இணை இயக்குனர் கிரிசாயா இயக்கியுள்ள இந்த படத்தில் பனிதா சந்து, பிரியா ஆனந்த், அன்புதாசன் மற்றும் பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். இந்நிலையில் இப்படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று நடைபெற்றது. அப்போது விழாவில் கலந்துகொண்ட பிரியா ஆனந்த் பேசியபோது....

Advertisment

priya anand

''எஸ்ரா படம் மூலம் மலையாளத்தில் என்னை அறிமுகப்படுத்தியதற்கு தயாரிப்பாளர் முகேஷ் மேத்தாவிற்கு நன்றி. நான் இங்கிலிஷ் விங்லிஷ் திரைப்படத்தில், நடிகை ஸ்ரீதேவி உடன் பணிபுரிந்தபோது, அவர் ஒரு நல்ல அம்மாவாகவும் இருப்பதைக் கண்டேன். அதேபோல், ஆதித்ய வர்மாவில் பணிபுரிந்தபோது, விக்ரம் அவர்கள் அக்கறையுள்ள அப்பாவாக இருப்பதைக் உணர்ந்தேன். துருவ் உடன் பணிபுரிவது சிறப்பாக இருந்தது, மேலும் ஆதித்யா வர்மா மிகவும் புதியாக இருக்கும்'' என்றார்.