mr.chandramouli

Advertisment

priya anand

சில கால இடைவெளிக்கு பிறகு நடிகை ப்ரியா ஆனந்த் தமிழில் அடுத்ததாக ஆர்.ஜே. பாலாஜியுடன் எல்.கே.ஜி படத்தில் நாயகியாக நடித்து வருகிறார். பெரும்பாலும் நடுத்தர ஹீரோக்களுடன் ஜோடி போட்டுவந்த அவர் முன்னணி நாயகர்கர்களுடன் நடிப்பது குறித்து பேசியபோது.... "நான் எதையும் எதிர்பார்த்ததும் கிடையாது. அதற்காக வருத்தப்பட்டதும் கிடையாது. என்னோட பாதை வேறு, ஆர்வம் வேறு. நான் எப்போதுமே படங்களின் எண்ணிக்கை சம்பளத்துக்காக மட்டும் நடித்ததில்லை. சினிமாவை நேசித்துதான் சினிமாவுக்குள் வந்தேன். எனக்குப் பல மொழிகள் தெரியும். மொழி எனக்கு ஒரு பிரச்சினையே இல்லை. எந்த மொழி படமாக இருந்தாலும் அது என் மனதுக்குப் பிடிக்கவேண்டும். எனக்கு அதில் முக்கியத்துவம் இருக்கவேண்டும். அதனால் ஒரு வருடத்துக்கு ஒரு மொழியில் என் ஒரு சில படங்கள்தான் வெளியாகிறதே என்று நான் ஒருபோதும் கவலைப்பட்டதே இல்லை. நடிப்பைத் தாண்டி எதையும் தலையில் ஏற்றிக்கொள்ளமாட்டேன்" என்றார்.