Skip to main content
Nakkheeran Magazine Nakkheeran Magazine

'நான் அவருடன் பல கல்லூரிகளுக்கு சென்றிருக்கிறேன்' - பிரியா ஆனந்த் 

Priya anand

 

வேல்ஸ் ஃபிலிம் இண்டர்நேஷனல் சார்பில் டாக்டர் ஐசரி கே கணேஷ் தயாரிப்பில் ஆர்.ஜே.பாலாஜி, பிரியா ஆனந்த், நாஞ்சில் சம்பத், ஜே.கே.ரித்தீஷ் ஆகியோர் நடிப்பில், அறிமுக இயக்குனர் கே.ஆர்.பிரபு இயக்கியிருக்கும் படம் எல்.கே.ஜி. வரும் பிப்ரவரி 22ஆம் தேதி வெளியாகும் இந்த படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு சமீபத்தில் நடைபெற்றது. இதில் படக்குழுவினர் அனைவரும் கலந்து கொண்டு, படத்தின் பல சுவாரஸ்யமான விஷயங்களை பகிர்ந்து கொண்டனர். அப்போது விழாவில் கலந்துகொண்ட நாயகி பிரியா ஆனந்த் பேசும்போது...

 

 

"இத்தகைய ஒரு நல்ல படக்குழுவின் ஒரு பகுதியாக நானும் இருந்தது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. குறிப்பாக, ஆர்.ஜே.பாலாஜி போன்ற யாரையும் புண்படுத்தாத நல்ல சிந்தனைகளை உடைய ஒருவருடன் பணியாற்றியது மகிழ்ச்சி. மேலும், நான் அவருடன் பல கல்லூரிகளுக்கு சென்றிருக்கிறேன், அவர் அங்கு பெண்கள் முன்னேற்றத்தை பற்றி பேசுவதை எண்ணி பெருமைப்படுகிறேன். இந்த படத்தில் எனக்கு வாய்ப்பளித்த தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் சாருக்கு நன்றி" என்றார்.

 

 

 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

சார்ந்த செய்திகள்