style="display:block" data-ad-client="ca-pub-7711075860389618" data-ad-slot="9350773771" data-ad-format="auto" data-full-width-responsive="true">
'மேயாத மான்' படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான பிரியா பவானி சங்கர் 'கடைக்குட்டி சிங்கம்' படம் மூலம் பிரபலமானார். இதையடுத்து தற்போது மான்ஸ்டர், குருதி ஆட்டம் ஆகிய படங்களிலும், மேலும் ஜீவா மற்றும் அருள்நிதி ஆகியோர் படங்களிலும் நடித்துவரும் அவர் அடுத்ததாக துல்கர் சல்மான் நடிக்கும் படத்தில் கதாநாயகியாக நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார். ரா.கார்த்திக் இயக்கும் இப்படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.